புதுதில்லி:
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13 வரை நடத்த நாடாளுமன்ற அமைச்சக குழு பரிந்துரை செய்துள்ளது.நாடாளுமன்றத்தில் மழைக்காலத் தொடர் 4 வாரங்களுக்கு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கூட்டத் தொடர் நடத்துவது குறித்து நாடாளுமன்ற விவகார ங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஜூன் 29 அன்று கூடியது. இந்த கூட்டத்தின் முடிவில் இந்த ஆண்டுக்கான மழைக்காலக் கூட்டத்தொடரை ஜூலை 19 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடத்தஅமைச்சரவை குழு பரிந்துரை அளித்துள்ளது.
*****************
....தொடர்புடைய செய்தி...
இன்று ஒன்றிய அமைச்சரவை கூட்டம்...
பிரதமர் மோடி தலைமையில் இன்று ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெறு கிறது. கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து அமைச்சர்கள் குழு ஆலோசனை கூட்டமும் நடைபெற உள்ளது.ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், கொரோனா மூன்றாவது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பூசிப் பணிகளை மேலும் துரிதப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.