india

img

மோடி ஆட்சியில் மட்டும் 10 ஆயிரம் என்ஜிஓக்களின் உரிமம் ரத்து? எப்.சி.ஆர்.ஏ. விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு....

புதுதில்லி:
வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக நிதிபெற்று வந்ததாக கூறி, கடந்த 10 ஆண்டுகளில் 20 ஆயிரத்து 600 அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் (என்ஜிஓ) உரிமங்களை மோடி அரசு ரத்து செய்துள்ளது.

இதில், மோடியின் ஆட்சிக் காலத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட என்ஜிஓ-க்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இதுதொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் (எப்.சி.ஆர்.ஏ)  2010-இன் பல்வேறு விதிமுறைகளை மீறியமை மற்றும் அதனுடன் செய்யப்பட்ட விதிகளை மீறி செயல்பட்டு வந்தமைக்காக என்ஜிஓ-க்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

கடந்த 2011 முதல் இன்றுவரை சுமார் 10 ஆண்டுகளில், 20 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (என்ஜிஓ) மற்றும் சங்கங்களின் வெளிநாட்டு நிதி உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுஉள்ளன.இதில், 2016 முதல் 8 ஆயிரத்து 353 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு எப்.சி.ஆர்.ஏசான்றிதழ்கள் புதுப்பிக்கப்படவில்லை. 2018 முதல் 2020 வரையிலான கடந்த மூன்று ஆண்டுகளில் 1,810 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் எப்.சி.ஆர்.ஏ பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டில் மட்டும் 463 என்ஜிஓ-க்களின் உரிமங்கள் ரத்து ஆகியுள்ளன.

எப்.சி.ஆர்.ஏ.-இன் 13-ஆவது பிரிவின் கீழ் 25 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள் கடந்த ஆண்டு இடைநீக்கம் செய்யப்பட்டன. இது 2019-இல் ஐந்து ஆக இருந்தது. ஆனால் 2018 ல் 233 க்கும் குறைவாகவே உள்ளது.இந்த நிறுவனங்கள், வருடாந்திர வருமானத்தை தாக்கல் செய்யத் தவறியதால், அவற்றின் உரிமம் ரத்து செய்யப்பட்டுஉள்ளன.இவ்வாறு உள்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.