புதுதில்லி:
பாஜக ஒன்றிய அரசாங்கத்திற்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மீது திடீர் கரிசனம் ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் வழக்குரைஞர் ஏ.எம்.ஆரிப் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற மழைக்காலக்கூட்டத்தொடர் புதன்கிழமை முடிவுக்கு வந்தது. செவ்வாய்க்கிழமையன்று மக்களவையில் அரசமைப்புச்சட்டத்தின் 127ஆவது திருத்தச்சட்டமுன்வடிவின்மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று ஏ.எம்.ஆரிப் பேசியதாவது:
அரசமைப்புச்சட்டத்தின் 127ஆவது திருத்தச்சட்டமுன்வடிவினை எங்கள் கட்சியின் சார்பில் ஆதரிக்கிறோம். நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்துவதற்காக இந்தத் திருத்தச்சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக அரசத்தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இந்த அரசாங்கத்தின் கூட்டாட்சித் தத்துவத்தைப் பின்பற்றுவதில் உள்ள போலிவாதத்தை அம்பலப்படுத்த நிர்ப்பந்தத்தில் தள்ளப்பட்டிருக்கிறேன்.
இந்த அரசாங்கம், கூட்டாட்சித்தத்துவம் என்ற பெயரில் முதலைக் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறது.இந்த அரசாங்கம் 2014இல் ஆட்சிக்கு வந்தபின்னர், 2019வரையிலும் நாட்டில் இருந்துவந்த கூட்டாட்சித் தத்துவத்தை அழித்து ஒழிக்கும் விதத்தில்தான் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி வந்தது. வேளாண் சட்டங்களை நிறைவேற்றியபோது இந்த அரசாங்கம் ஏன் கூட்டாட்சித் தத்துவத்தை அமல்படுத்தவில்லை.வேளாண் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு முன்பு இந்த அரசாங்கம், மாநில அரசாங்கம் எதையாவது கலந்து ஆலோசனை செய்ததா? தேசியக் கல்விக் கொள்கையை வடிவமைத்தபோது கூட்டாட்சித் தத்துவத்தை ஏன் மறந்தீர்கள்? இவையெல்லாம் நாட்டின் அரசமைப்புச்சட்டத்தின்கீழ் பொதுப் பட்டியலில் உள்ள துறைகள் இல்லையா?
பின், ஜிஎஸ்டி-யின்கீழ் மாநிலங்களுக்கு இழப்பீடு அளிப்பதிலும்கூட, மாநில அரசாங்கங்கள் ஒன்றிய அரசாங்கத்திற்கு, நாம் ஒரு கூட்டாட்சித் தத்துவத்தின் கீழ் ஆட்சி அமைப்பில் இருந்துகொண்டிருக்கிறோம் என்றும், மாநில அரசாங்கங்கள் தங்களுக்குரிய பங்கினைப் பெறுவதற்காக, ஒன்றிய அரசாங்கத்தின் தயவில் இல்லை என்றும் நினைவுபடுத்த வேண்டியிருந்தது. சென்ற மாதம் கூட, கூட்டாட்சித் தத்துவம் குறித்து இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் அம்பலப்படுத்தப்பட்டது.
உச்சநீதிமன்றம் நினைவுபடுத்தாவிட்டால்
நம் நாடு, மாநிலங்களின் ஒன்றியம் என்றும், ஒன்றிய அரசாங்கமானது அனைத்து மாநிலங்களில் உள்ள மக்களுக்கும் கோவிட் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து விநியோகிக்க வேண்டியது கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் இந்த அரசாங்கத்திற்கு நினைவுபடுத்தியபோது, இந்த அரசாங்கத்திற்கு வெட்கமே கிடையாதா? அதுவரையிலுமே ஒன்றிய அரசாங்கமானது, மாநில அரசாங்கங்கள்தான் தடுப்பூசி தயாரிப்பாளர்களின் தயவில் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தது. தடுப்பூசித் தயாரிப்பாளர்கள் தங்கள் இஷ்டத்திற்கு தடுப்பூசிகளின் விலைகளை நிர்ணயம் செய்து நாட்டைச் சூறையாட அனுமதித்திருந்தது.உச்சநீதிமன்றம், கூட்டாட்சித் தத்துவம் குறித்து நினைவுபடுத்தாவிட்டால், பல கோடிக்கணக்கான நம் நாட்டு மக்கள் இலவசமாகத் தடுப்பூசி பெற்றிருக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது. நிச்சயமாக, நம் மக்களுக்கு, தடுப்பூசிகள் இலவசமாகக் கிடைத்திருக்காது. இது தொடர்பாக, அரசாங்கத்திற்கு அதன் கடமையை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியமைக்காக, ஒன்றிய அரசாங்கம் அதற்கு நன்றி கூற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இப்போது ஒன்றிய அரசாங்கம், அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவது குறித்து பீற்றிக்கொள்ள முடியும். இப்போதுதான் நாட்டில் முதன்முறையாக இலவசமாக தடுப்பூசி வழங்குவதுபோல் கூறிக்கொண்டிருக்கிறது.
ஒட்டுக் கேட்பதும் நாசவேலை செய்வதும்
அடுத்து ஒன்றிய அரசாங்கத்திடமிருந்து மேலும் ஒன்றைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், புகழ்மிக்க வல்லுநர்கள் முதலியவர்களின் தொலைபேசிகளை தேர்தல் சமயங்களில் ஒட்டுக்கேட்பது என்பதும் அரசாங்கம் கூறுகின்ற கூட்டாட்சித் தத்துவத்தின்கீழ்தான் வருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இப்போதாவது ஒன்றிய அரசாங்கம் இதைப்பற்றிக் கவலைப்படுகிறதா? இதுதொடர்பாக அவையில் விவாதம் நடத்திட இந்த அரசாங்கம் ஏன் முன்வர மறுக்கிறது? தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் மீது நாசவேலை செய்திட எந்தக் கூட்டாட்சித் தத்துவத்தின்கீழ் இந்த அரசாங்கம் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இது மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்துமே
தொடர்ச்சி 3ம் பக்கம்
படம் : கோப்பு படம்