புதுதில்லி:
ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களின் செல்லுபடிக் காலம் மார்ச் 31 ஆம்ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2020 பிப்ரவரி முதல் காலாவதியாகும் சான்றிதழ்களுக்குஇது பொருந்தும் என்று அறிவிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் புதுப்பிக்கவும் கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதை கருத்தில் கொண்டு, ஓட்டுநர் உரிமம், பதிவு சான்றிதழ்கள், பெர்மிட்கள்ஆகியவை செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 வரை செல்லும்என கருத வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சகம் சார்பில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.தற்போது மார்ச் மாதம் வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதத்தில் இந்த கால அவகாசத்தை மத்திய அரசு அளித்துள்ளது.