புதுதில்லி:
தலைநகர் தில்லியில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், அங்கு கடந்த 3 நாட்களாக கொரோனாவால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. தில்லி சுகாதாரத்துறை சார்பில் ஞாயிறன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, தில்லியில் ஞாயிறன்று மேலும் 24பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,37,317 ஆக அதிகரித் துள்ளது.மேலும், தில்லியில் கடந்த சில தினங்களாக கொரோனாபாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக ஞாயிறன்று கொரோனாவால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதுவரை அங்கு கொரோனா பாதிப்பால் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 25,079 ஆக உள்ளது. அதேசமயம் ஞாயிறு ஒரே நாளில் 56 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குண மடைந்துள்ளனர்.