புதுதில்லி:
இந்துத்துவா பேர்வழியும், ‘ரிபப்ளிக்’ டிவி முதலாளியுமான அர்னாப்கோஸ்வாமி, அநாகரிகமான தொலைக்காட்சி உரையாடல்களுக் கும், திருட்டுத்தனமான நடவடிக்கைகளுக்கும், மோசடிகளுக்கும் பெயர் போனவர்.ரிபப்ளிக் டிவி மூலம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயன்ற குற்றச்சாட்டில், இங்கிலாந்து நாட்டின் ஒளிபரப்பு ஒழுங்குத் துறையே, அர்னாப் கோஸ்வாமிக்கு அண்மையில் 20 ஆயிரம் பவுண்டுகள் (சுமார் ரூ.19.73 லட்சம்) அபராதம் விதித்தது. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவும் உத்தரவிட்டது.
மும்பையில் அன்வாய் நாயக் என்ற என்ஜீனிரியருக்கு தரவேண்டிய பணத்தைத் தராமல் மோசடி செய்து, அவரைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்தில், மும்பை போலீசார், அர்னாப்கோஸ்வாமி மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 மற்றும் பிரிவு 34 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய் துள்ளனர்.இவை ஒருபுறமிருக்க, தனது ரிபப்ளிக் டிவி-யின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்திக் காட்டுவதற்காக, அர்னாப் கோஸ்வாமி மும்பையிலுள்ள வீடுகளுக்கு மாதந்தோறும் ரூ. 400 முதல் ரூ. 500 வரை லஞ்சம் கொடுத்தும் அண்மையில் கையும் களவுமாக மாட்டினார்.இந்த டிஆர்பி ரேட்டிங் மோசடி வழக்கில் பார்க் அமைப்பின் முன்னாள்சிஇஓ பார்த்தோ தாஸ்குப்தா, ரிபப்ளிக்டிவி சிஇஓ விகாஸ் உள்ளிட்டோரை கைது செய்த மும்பை காவல்துறை, சமீபத்தில் இந்த வழக்கு தொடர்பாக3 ஆயிரத்து 600 பக்க குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தனர். அதில், அர்னாப் கோஸ்வாமி இதுவரை செய்துவந்த பல்வேறு மோசடிகளையும் புட்டுபுட்டு வைத்துள்ளனர்.
குறிப்பாக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவல், விமானப்படைத் தலைவர் ஆகியோர் தவிர, வேறு யாருக்குமே தெரியாத ராணுவ ரகசியங்கள், இந்திய விமானப்படையின் பாலகோட் தாக்குதல், காஷ்மீருக்கான 370-ஆவது சட்டப் பிரிவு ரத்து தொடர்பான தகவல்கள் அர்னாப் கோஸ்வாமிக்கு மட்டும் முன்கூட்டியே கிடைத்து வந்ததாக என்று மும்பை போலீசார் வைத்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது. இதுதொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, அர்னாப் கோஸ்வாமி, தூர்தர்ஷனின் ப்ரீ டிஷ், டிடிஎச் சேவைகளை (DD Free Dish DTH Service) கடந்த 2 ஆண்டுகளாக திருட்டுத்தனமாக பயன்படுத்தி வந்தது தொடர்பான மற்றொரு மோசடியும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தின் கீழான தூர்தர்ஷனின் ப்ரீ டிஷ், டிடிஎச் சேவை பயனாளர்களை பயன்படுத்துவதற்காக, அர்னாப் கோஸ்வாமி ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ. 12 கோடி வரை அரசுக்கு கட்டணமாக செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசில் தமக்கு இருந்த செல் வாக்கை பயன்படுத்தி கடந்த 2 ஆண்டுகளாக திருட்டுத்தனமாகவே அரசு நிறுவனங்களை சொந்த ஆதாயத்துக்கு அர்னாப் கோஸ்வாமி பயன்படுத்தி வந்துள்ளார்.
2019-இல் இந்த விவகாரம் கேள்விக்கு உள்ளான பின்னரே, தனதுமோசடியை அர்னாப் நிறுத்தி இருக்கிறார். இது புதிய சர்ச்சையாக வெடித்துள் ளது. இவ்வாறு அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள், மத்திய பாஜக அரசில் அர்னாப் கோஸ்வாமி எவ்வளவுசெல்வாக்கு செலுத்தி வந்துள்ளார் என்பதற்கு சாட்சியாக அமைந்துள்ளன.இதனிடையே, அர்னாப் கோஸ்வாமி தனது வாட்ஸ் ஆப் உரையாடலில், 46 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப் பட்டது, தனது ‘ரிபப்ளிக் டிவி’ சேனலின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்துவதற்கு கிடைத்த சரியான வாய்ப்பு என்று கூறியிருந்ததை சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தினர் காறி உமிழ்ந்துள்ளனர்.டிஆர்பி-க்காக இதுபோன்று கேவலமாக நடந்து கொள்வதை நினைத்து அர்னாப் வெட்கப்பட வேண்டும் என்றும்,தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்ததற்காகவும், கீழ்த்தரமான ஊடகவியலாளராக நடந்து கொள்வதற்காகவும் அர்னாப் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.