india

img

ஹைட்ரஜனில் ரயில்களை இயக்க அமைச்சகம் முடிவு...

புதுதில்லி:
டீசலில் இயங்கும் ரயில்களை ஹைட்ரஜனில் இயங்கும் வகையில் மாற்ற ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எரிபொருள் செலவைக் குறைக்கும் வகையில் டீசலி இயங்கும் ரயில்களை(டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் - டிஇஎம்யு)ஹைட்ரஜனில் இயங்கும் வகையில் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.2.3 கோடி மிச்சமாகும். அத்துடன் ஆண்டுக்கு 11.12 கிலோ டன் கார்பன்டை ஆக்சைடு மற்றும் 0.72 கிலோ டன் துகள்கள் வெளியேற்றம் தடுக்கப்படும். இந்த திட்டத்தின் சோதனை முயற்சியாக முதலில் 2 ரயில்களை மட்டும் ஹைட்ரஜனில் இயங்கும் வகையில் மாற்றுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கான தொழில்நுட்பம் வழங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட உள்ளன.இந்த தொழில்நுட்பத்தின் மூலம், டீசலில்இயங்கும் ரயில்களை மாற்றி ஹைட்ரஜ னில் இயங்க வைக்க முடியுமா என பரிசோதிக்கப்படும். ஹரியானா மாநிலம் சோனிபட் - ஜிந்த் மார்க்கத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜெர்மனியில் ஹைட்ரஜனில் ரயில்களை இயக்குவது தொடர்பான சோதனைஓட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.