புதுதில்லி:
பிரதமர் மோடி தலைமையில் ஜூன் 9 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைமுடிவுகள் குறித்து வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், 2021-22 ஆம் நிதியாண்டில் நெல்லுக்கான (சாதாரண ரகம்) குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 72 ரூபாய் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு குவிண்டால் ரூ.1868ல்இருந்து ரூ.1940 ஆக உயர்த்தப்படுகிறது. எள் குவிண்டாலுக்கு 452 ரூபாயும், துவரைமற்றும் உளுந்து ஆகியவைதலா ரூ.300உயர்த்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள் ளது என்று தெரிவித்தார். ரயில்வே துறையில் 5ஜி இணையதள சேவை வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல்அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.