புதுதில்லி:
பிரதமரின் கிசான் நிதி முறைகேட்டில் தமிழகத்தில் இதுவரை பாதிக்கும் குறைவான தொகை மட்டுமே திரும்பப்பெறப்பட்டுள்ளது என்று நாடாளு மன்றத்தில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார். பிரதமரின் கிசான் நிதி திட்டத்தில் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, தஞ்சை உட்படபத்துக்கும் மேற்பட்ட மாவட்டங் களில் பல கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து நாடாளுமன்றத் தில் திமுக எம்.பி., எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட மக்களவை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய வேளாண்த்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அளித்த பதிலில், தமிழ
கத்தில் விவசாயிகள் அல்லாத 6.97 லட்சம் பேருக்கு 321.32 கோடிரூபாய் வழங்கப்பட்டிருப்ப தாகவும் 158.75 கோடி ரூபாய் திரும்ப பெறப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.கிசான் நிதி முறைகேட்டில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் இதுவரை 140 பேரை கைது செய்துள்ளனர். அவர்களில் 8 பேர் மட்டுமே அரசுஊழியர்கள். மற்றவர்கள் தற்காலிகபணியாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள். இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி முன்வராததால் கைதான அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் மட்டும் 20 ஆயிரம்பேர் போலியாக சேர்க்கப்பட்டுள் ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மோசடி செய்தவர்களின் கணக்கைகுறைத்துக் காட்டியுள்ளனர். முறைகேடாக பெறப்பட்ட பணத்தின் மதிப்பு ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கும். மத்திய அரசு சம்பந்தப்பட்ட நிதியில் மோசடி நடந்திருப்ப தால் இதுகுறித்து சிபிஐ விசாரணைநடத்த வேண்டும் என்று திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் வலியுறுத்தினார்.