புதுதில்லி:
பொதுக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் முன்னோடியில்லாத வகையில் வளர்ச்சி கண்டகேரளாவுக்கு மீண்டும் தேசிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. பட்ஜெட் டுக்கு முன்னோட்டமாக மத்திய அரசுவெளியிட்டுள்ள தேசிய பொருளாதார ஆய்வு அறிக்கையின் இரண்டாவது தொகுதியில் 310 ஆம் பக்கத்தில்கேரளத்தின் சாதனை குறிப்பிடப் பட்டுள்ளது.
நாட்டில் 96 சதவிகித மாணவர்கள்தொடக்கக் கல்வியில் அனுமதி பெற்றதாகக் கூறும் ஆவணம், தொடர்ச்சியான கல்வியைப் பொறுத்தவரை கேரளா முன்னிலையில் இருப்பதைக்காட்டுகிறது. ஆறு முதல் 13 வயதுக்குஉட்பட்ட அனைத்து குழந்தைகளும் பள்ளியில் சேர்கின்றனர். கோவிட் காலத்தில், 100 சதவிகித பள்ளி சேர்க்கை மற்றும் டிஜிட்டல் கற்றல் தொடர்ச்சியை உறுதி செய்த ஒரேமாநிலம் கேரளா மட்டுமே. கேரளாவில் மட்டும் 14 முதல் 17 வயதுடையவர்களில் 98.3 சதவிகிதம் பேர் இந்த
வகுப்புகளில் கலந்து கொள்கின்றனர்.
முன்னதாக, டிஜிட்டல் கல்வியில் கேரளாவின் சிறப்பை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (இப்போது கல்வி அமைச்சகம்) பாராட்டியது. டிஜிட்டல் கல்வி கற்றல் முயற்சிகள் இந்தியா முழுவதற்கும் கேரளாவின் டிஜிட்டல் கல்வியை முன்மாதிரியாக அந்த அறிக்கை விவரித்துள் ளது.மாநிலத்தில் பொதுக் கல்வித் துறையை வலுப்படுத்த கடுமையாக உழைத்த அனைவருக்குமானது இந்த அங்கீகாரம் என்று பொதுக்கல்வித்துறை அமைச்சர் சி.ரவீந்திரநாத் தெரிவித்தார்.