india

img

இந்தியா - அமெரிக்கா அமைச்சர்கள் நவம்பரில் பேச்சு....

புதுதில்லி:
இந்தியா - அமெரிக்க வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை அமைச்சர்கள்  பங்கேற்கும் டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தை நவம்பரில் அமெரிக்காவில் நடைபெறும் என்று இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ஹர்சவர்த்தன் சிரிங்லா தெரிவித்துள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி மாளிகையின் உயர் அதிகாரிகள், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோருடன் ஹர்சவர்த்தன் சிரிங்லா பேச்சு நடத்தினார். அப்போது நவம்பரில் இருநாடுகளுக்கு இடையிலான  பேச்சுவார்த்தையை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.ஆனால் தேதிகள் இன்னும் முடிவாகவில்லை என சிரிங்லா தனதுஅமெரிக்க பயணத்தின் போது கூறினார்.