india

img

மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி விவசாயிகளுக்குத் துரோகம்.... வெளியே வந்த சச்சின், ரவிசாஸ்திரி, கோலி, கும்ப்ளே பூனைக்குட்டிகள்....

புதுதில்லி:
இந்திய விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக தலைநகர் தில்லியைமுற்றுகையிட்டு நடத்தும் போராட் த்தை, இந்திய பிரபலங்கள் கண்டுகொள்ளாத நிலையில், உலக பிரபலங்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

ஏற்கெனவே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த நிலையில், அண்மையில், உலகப் புகழ்பெற்ற இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் டுவிட்டரில், தனது ஆதரவைத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பாப்உலகின் இளவரசி என்று கொண்டாடப்படும் புகழ் பெற்ற ஹாலிவுட் நட்சத்திரம் ரிஹானா, விவசாயிகள் போராட்டத்தைக் குறிப்பிட்டு, “ஏன் இதைப் பற்றியாரும் பேசுவதில்லை” என்று கேள்விஎழுப்பி- தனது ஆதரவை தெரிவித் தார். இது உலக அளவில் ட்ரெண்டிங்ஆனது. ரிஹானாவை பின் தொடர்பவர்கள் பலரும் #RihannaSupportsIndianFarmers என்ற ஹேஷ்டேக் கில்தங்களது விவசாயிகள் போராட்டத் துக்கு ஆதரவாக இப்போதுவரை தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். 

அவரையடுத்து, லெபனான் - அமெரிக்க மாடல் நடிகையான மியா கலீபா-வும் இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, “என்ன நடக்கிறது.. இது என்ன மனித உரிமை மீறல்? புதுதில்லியில் இண்டெர்நெட் துண்டிப்பா..? நான் விவசாயிகள் பக்கம் நிற்கிறேன்” என்று டுவிட்டரில் பதிவிட்டார். “விவசாயிகள் காசுக்காக நடிக்கிறார்கள்?” என்ற மோடி அரசின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், “அவர்கள் சிறந்த இயக்குநர்கள் கண்ணில் படாமல் இருக்க வேண்டும்” என்றும் மோடி அரசை கிண்டல் அடித்திருந்தார்.இவர்களைத் தொடர்ந்து, இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் கிளாடியா வெபே, இயற்கை போராளி வாணீசா நகாட்டே ஆகியோரும் இந்திய விவசாயிகளின் போராட்டம் பற்றி டுவிட்டரில் பதிவிட்டனர்.
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் மருமகளும், ஆசிரியருமான மீனா ஹாரிஸ், “உலகின் பழமையான ஜனநாயகம் மற்றும்அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது” என்று காட்டமாக பதிவிட்டார். “இந்தியாவின் இணைய முடக்கம் மற்றும் துணை ராணுவ வன்முறை ஆகியவற்றுக்கு எதிராக நாம் அனைவரும் கோபப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார். 

எல்லாவற்றுக்கும் மேலாக, “தேசியவாதம் அமெரிக்க அரசியலில்.. இந்தியாவில்... அல்லது வேறுஎந்த இடத்திலும் இருப்பதைப் போலவே ஆபத்தானது. பாசிஸ்ட் டிக்டேட்டர்கள் எங்கும் செல்லவில்லை என்பதை உணர்ந்து, மக்கள் வீறுகொண்டு எழுந்தால் மட்டுமே அதைத் தடுத்து நிறுத்த முடியும்” என்றும் அறைகூவல் விடுத்தார்.அமெரிக்க ஜனாதிபதி மாளிகை பிரதிநிதி ஜிம் கோஸ்டாவும், இந்தியாவில் தொடரும் அமைதியின்மை தொந்தரவாக இருப்பதாகவும், நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இவ்வாறு கிரேட்டா தன்பெர்க், ரிஹானா, மியா கலீபா, கிளாடியே வெபே, மீனா ஹாரிஸ், ஜிம் கோஸ்டா ஆகியோரின் கருத்துக்கள் உலகம் தழுவிய விவாதமாக மாறி, தற்போது மோடி அரசுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.இதனால் ஆத்திரமடைந்த மோடிஅரசு, வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு வெளிநாட்டுப் பிரபலங்களைக் கண்டித்தது.அத்துடன் நிற்காமல், உலக பிரபலங்களுக்கு எதிராக, தனக்கு ஆதரவான இந்திய திரைப் பிரபலங்களையும், கிரிக்கெட் வீரர்களையும் தற் போது களத்தில் இறக்கி விட்டுள்ளது.இதில், “விவசாயிகள் போராட்டம் குறித்து யாரும் பேசவில்லை. ஏனென்றால் அவர்கள் விவசாயிகள் அல்ல. அவர்கள் தீவிரவாதிகள்” என்றுபாஜக ஆதரவு நடிகை கங்கனா ரணாவத் முதல் ஆளாக களத்தில் இறங்கினார். “விவசாயிகள் போராட்டம் பற்றி நீ பேச வேண்டாம். அமைதியாக இருமுட்டாளே!” என்றும் பாப் பாடகி ரிஹானா மீது விழுந்து பிராண்டினார்.

கங்கனாவைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், ரவி சாஸ்திரி, கும்ப்ளே, விராட் கோலி, ரோஹித் சர்மா, பிரக்யான் ஓஜா ஆகியோரும் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக, உலகப் பிரபலங்கள் மீது பாய்ந்துள்ளனர்.“இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளியிலுள்ள சக்திகள், பார்வையாளர் களாக இருக்கலாமே தவிர, பங் கேற்பாளராக இருக்க முடியாது. இந்தியர்களுக்கு இந்தியாவை பற்றி தெரியும். இந்தியாவுக்கான முடிவை இந்தியர்கள் எடுப்பார்கள்” என்று சச்சின் டெண்டுல்கர் கோபப்பட்டுள்ளார்.

அவரது கருத்தை அப்படியே ஏற்று “ஒரே நாடாக, நாம் இணைந்திருப்போம்” என்று விராட் கோலி, ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஹர்திக் பாண்டியா பலரும் டுவிட்டரில் பதிவிட்ட நிலையில், “எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் வெளியாட்கள் மூக்கை நுழைப்பது எங்களுக்குத் தேவையில்லை” என்றுபிரக்யான் ஓஜாவும், “விவசாயிகளுடன் மத்திய அரசு இதுவரை 11 கட்டமாக பேச்சு நடத்தியது. ஆனாலும் முடிவு எட்டப்படாமல் போய்விட்டது” என்று அனில் கும்ப்ளேவும் வக்காலத்து வாங்கியுள்ளனர்.
இது இந்திய விவசாயிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “இந்தியாவின் இறையாண்மை மக்களிடம்தான் உள்ளது மிஸ்டர் டெண்டுல்கர்” என்றும், “விவசாயிகள் 70 நாட்களாக போராடிக் கொண்டிருக்கும்போது,  இவ்வளவு காலமாக அமைதியாக இருந்து விட்டு, இப்போது மட்டும் திடீரென பாஜக ஆதரவாக ஆஜராவது ஏன்? பாஜக உங்களை எல்லாம் மிரட்டுகிறதா?” என்றும் சமூக வலைதளவாசிகள் பலரும் பதிலடி கொடுக்கத் துவங்கியுள்ளனர்.

பாலிவுட் நடிகை டாப்சியும் இதுதொடர்பாக கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். கிரேட்டா தன்பெர்க், ரிஹானா உள்ளிட்டோர் மீதான கங்கனா ரணாவத், டெண்டுல்கர் உள்ளிட்டோரின் விமர்சனத்தை அவர் கண்டித்துள்ளார்.“ஒரு ட்வீட் உங்கள் ஒற்றுமையைக் குலைக்குமானால், ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையை மாற்றுமானால், ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையை குலைக்குமானால், நீங்கள்தான் உங்களின் மதிப்பினை மறு பரிசீலனை செய்யவேண்டும். மற்றவர்களுக்கு பாடமெடுக்கும் பிரச்சாரகர்களாக மாறக் கூடாது” என்று விளாசித் தள்ளியுள்ளார். டாப்சியைத் தொடர்ந்து வேறு பலரும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.