india

img

என்ஐஏவை ஏவி, விவசாயிகளை மிரட்டிப் பார்க்க வேண்டாம்.... அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் எச்சரிக்கை....

புதுதில்லி:
மத்திய புலனாய்வு முகமையை (National Investigation Agency - NIA)ஏவி விடுவதற்கு, விவசாயிகள் ஒன்றும் தேச விரோதிகள்அல்ல என்று சிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி) தலைவர் சுக்பீர் சிங் பாதல், மோடிஅரசை சாடியுள்ளார்.

விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ‘சீக்கியர்களுக்கு நீதி’ (Sikhs forJustice - SFJ) என்ற அமைப் பின் தலைவர் குர்பட்வந்த் சிங் பன்னு, விவசாயிகள் சங்கத் தலைவர் பல்தேவ் சிங் சிர்சா, பஞ்சாபி நடிகர்தீப் சித்து உள்பட 40 பேர் மீதுதேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்குப் பதிவுசெய்துள்ளது. விசாரணைக்கு வருமாறு சம்மனும் அனுப்பியுள்ளது. இதனைக் குறிப் பிட்டே மோடி அரசை பாதல் டுவிட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.“விவசாயிகள் சங்கத் தலைவர்களையும், விவசாயிகளுக்கு ஆதரவானவர் களையும் மத்திய பாஜக அரசு, தேசிய புலனாய்வு முகமைமற்றும் அமலாக்கத்துறை மூலம் மிரட்டி வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. விவசாயிகள் ஒன்றும் தேச விரோதிகள் அல்ல. 9-ஆவது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியடைந்த பின்னர்,மத்திய அரசு இதுபோன்றசெயல்கள் மூலம் விவசாயிகளை சோர்வடையச் செய்யலாம் என்று நினைக்கிறது. அது நடக்காது” என்று கூறியுள்ளார்.