புதுதில்லி:
ரஷ்ய நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் லைட்தடுப்பூசியின் பரிசோதனை க்கு ஒன்றிய அரசு அனுமதிமறுத்துள்ளது. இந்தியா வில் கோவாக்சின், கோவி ஷீல்டு, ஸ்புட்னிக் ஆகிய மூன்று வகை கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.
ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் இரண்டு கட்ட பரிசோதனை முடித்துவிட்ட டாக்டர் ரெட்டி லேப், மூன்றாவது கட்ட பரிசோதனை நடத்தஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி மறுத்துள்ளது. ரஷ்யாவில் பரிசோதிக்கப்பட்ட இந்த மருந்தை மற்ற தடுப்பூசி போல் இரண்டு டோஸ்கள் போட தேவையில்லை என்றும் ஒரே டோஸில் கொரோனா தொற்றுக்கு எதிரான 79.8 சதவீத எதிர்ப்பு சக்தி மக்களுக்கு கிடைத்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.