காஞ்சிபுரம்,நவ. 25- பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் புஷ்கர் (வயது62). இவர் குடும்பத்து டன் காஞ்சிபுரம் அருகே உள்ள வாலாஜாபாத் அடுத்த நெய்குப்பம் பகுதியில் தங்கி கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்தார். கடந்த மாதம் பணியில் இருந்த போது தொழிலாளி புஷ்கர் மார டைப்பால் இறந்து போனார். இதை யடுத்து உடலை பீகாருக்கு கொண்டு செல்லாமல் இங்கேயே புதைக்க உறவினர்கள் முடிவு செய்தனர். அவர்கள் புஷ்கரின் உடலை புதைக்க அருகில் உள்ள ஊத்துக்காடு மற்றும் கித்திரிப்பேட்டை பகுதியில் அனுமதி கேட்டனர். ஆனால் அந்த ஊராட்சி தலைவர்கள் அனுமதி கொடுக்க வில்லை என்று தெரிகிறது. இதனால் புஷ்கரின் உடலுடன் இருந்த உறவி னர்கள் என்ன செய்வது என்று தெரியா மல் நெய்குப்பம் கிராமத்தில் குடிநீர் நீரேற்றும் குழாய் அருகே திறந்த வெளியில் புதைத்து சென்று விட்டனர். இது அப்பகுதி மக்களுக்கு உடனடி யாக தெரியவில்லை. இதற்கிடையே கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக புஷ்கர் உடல் புதைக்கப் பட்ட இடத்தில் மணல் இறங்கியது. மேலும் அருகில் காய்ந்த பூமாலை, ஊதுபத்திகள் கிடந்தது. இதன் பின்னரே அந்த இடத்தில் புஷ்கரின் உடலை உறவினர்கள் இங்கு புதைத்து சென்று இருப்பது தெரிந்தது. குடிநீர் குழாய் அருகே உடல் புதைக்கப்பட்டு உள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ள னர். உடலை தோண்டி எடுத்து மயானத்தில் புதைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெய்குப்பம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது, மரணம் அடைந்த பீகார் தொழி லாளியின் உடலை புதைக்க இடம் கொடுக்காமல் ஊத்துக்காடு மற்றும் கித்திரிப்பேட்டையில் தடுத்து இருப்பது வேதனைக்குரியது. இதனால் அவரது உறவினர்கள் உடலை நெய்குப் பம் கிராமத்தில் குடிநீர் குழாய் அருகே புதைத்து சென்று விட்டனர். தற்போது உடல் புதைக்கப்பட்ட இடத்தில் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்குகிறது. குடிநீர் குழாயில் பாதிப்பு ஏற்படும் முன்பு உடலை தோண்டி எடுத்து சுடுகாட்டில் புதைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை பெய்ததால் இது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்றனர். இதுகுறித்து உடலை புதைக்க இடம் அளிக்க மறுத்த ஊராட்சி தலைவர்கள் கூறும்போது, இறந்த வர்கள் உடலை புதைக்க வெவ்வேறு சாதியினருக்கு இடம் உள்ளது. இதனால் வடமாநில தொழிலாளியின் கோரிக்கையை நாங்கள் நிராகரிக்க வேண்டியது இருந்தது. கிராமத்தில் உள்ளவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானத்தில் இல்லாமல் வேறு இடத்தில் உடலை அடக்கம் செய்ய கூறியிருந்தோம்” என்றனர். இதுதொடர் பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காவல்துறை கண்காணிப் பாளர் சுதாகர் ஆகியோர் விசாரித்து வருகிறார்கள். தொழிலாளி புஷ்கரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு தகுந்த மரியாதையுடன் அடக்கம் செய்யப் படும் என்று அவர்கள் தெரிவித்துள்ள னர்.