india

img

இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து... பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டு டுவிட்டர் நிறுவனம் குற்றச்சாட்டு....

புதுதில்லி:
மத்திய பாஜக அரசின் தனியுரிமைக் கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால், இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதாகவும், இது தங்களுக்கு மிகுந்த கவலை அளிப்பதாகவும் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை, மத்திய பாஜக அரசு கடந்த மே 25 முதல் நாட்டில் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. சமூக ஊடக நிறுவனங்கள் அதன் அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்களை வலைதளத்தில் வெளியிட வேண்டும்; புகார்களைப் பெறுவது, நடவடிக்கை எடுப்பது போன்றவற்றுக்காக இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்; சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்; சர்ச்சைக்குரிய பதிவை யார்முதலில் பதிந்தது என்ற விவரத்தைஅரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற விதிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. இவற்றுடன் இணங்கிப் போக முயற்சிப்பதாக டுவிட்டர் நிறுவனம் ஏற்கெனவே கூறிவிட்டது என்றாலும் சமீப காலங்களில் தங்களை நிறுவனத்தை விமர்சிப்பது, தங்கள் ஊழியர்களை மிரட்டும் வகையில் காவல்துறையை அனுப்பி அலுவலகத்திற்குள் புகுந்து சோதனை நடத்துவது போன்ற விஷயங்கள் டுவிட்டர் நிறுவனத்தை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. 

குறிப்பாக, சம்பித் பத்ராவின் ‘டூல்கிட்’ விவகாரம் முக்கியப் பிரச்சனையாக மாறியுள்ளது.கொரோனா வைரஸை ‘மோடி வைரஸ் என குறிப்பிட வேண்டும்; ‘கும்பமேளாதான் கொரோனா இரண்டாவது அலைக்கு காரணம்என பிரச்சாரம் செய்ய வேண்டும்’என காங்கிரஸ் தனது கட்சியின ருக்கு ‘டூல்கிட்’ ஒன்றைத் தயாரித்துக்கொடுத்ததாக பாஜக-வின் செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதற்கான ஆதாரம் என்று காங்கிரசின் தேர்தல் சின்னம் பொறித்த ஆவணம் ஒன்றையும் அவர் வெளியிட்டார்.மேலும், ‘டூல்கிட்’ மூலம், சர்வதேச அளவில் இந்தியா மற்றும் அதன் பிரதமர் மோடியின் மதிப்பைகுறைக்க காங்கிரஸ் சதி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பத்ராவின் இந்த பதிவை, பாஜக தேசியத்தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோரும் அவரவரின் டுவிட்டர் பக்கங்களில் பகிர்ந்த னர்.ஆனால், இந்த ‘டூல்கிட்’ உண்மையல்ல, இதை தாங்கள் உருவாக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி போலீசில் புகார் அளிக்கவே, சம்பித் பத்ரா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் 4 பேரின் ‘டூல்கிட்’ பதிவு, சித்தரிக்கப்பட்டதாக (manipulated media) இருக்கலாம் என்று டுவிட்டர் நிர்வாகம் முத்திரை குத்தியது. இது பாஜக-வினரை கடும் ஆத்திரமடைய வைத்தது. 

சித்தரிக்கப்பட்டதாக இருக்கலாம் என்ற முத்திரையை டுவிட்டர் நிறுவனம் நீக்க வேண்டும் என்று அவர்கள் கூறிப் பார்த்தனர். ஆனால், டுவிட்டர் நிறுவனம் அதனை ஏற்கவில்லை.இந்நிலையில், மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள தில்லி காவல்துறை, கடந்த திங்கட்கிழமை யன்று தில்லி மற்றும் குர்கானிலுள்ள ‘டுவிட்டர் இந்தியா’ நிறுவனத்தின் அலுவலகத்திற்குள் புகுந்து திடீர்சோதனையில் ஈடுபட்டனர். ‘டூல்கிட்’விவகாரம் தொடர்பான ஆவணங்களை அவர்கள் தேடினர். இது,பகிரங்கமாக டுவிட்டர் நிறுவனத்தை அச்சுறுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்பட்டது.இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளின் பின்னணியில்தான், டுவிட்டர் நிறுவனம் மே 26 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளது.

‘இந்திய மக்களுக்கு சேவை வழங்குவதில் டுவிட்டர் எப்போதுமே பொறுப்புடன் செயல்படும். தொடர்ந்து இந்தியாவில் சேவைவழங்க, இந்திய சட்ட விதிமுறைகளின்படி செயல்பட டுவிட்டர் தயாராகவே உள்ளது. இந்திய சட்ட விதிமுறைகளை மதிக்கும் அதேசமயம் உலகம் முழுவதும் பின்பற்றப்படும் கருத்துச் சுதந்திரம், ஒவ்வொ ருவரின் குரலுக்கும் மதிப்பளிப்பது, தனியுரிமையைப் பாதுகாத்தல், வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட கொள்கைகளின்படி இயங்குவதும் அவசியமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் எங்கள் ஊழியர்கள் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள்மற்றும் எங்களின் பயனாளர்களுக்கு ஏற்படும் கருத்து சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல் ஆகியவை கவலை அளிக்கிறது. 

எனினும், இதுதொடர்பாக திறந்த பேச்சுவார்த்தைக்கும் எங்கள் நிறுவனம் தயாராகவே உள்ளது’ என்று டுவிட்டர் நிறுவனம் குறிப் பிட்டுள்ளது.ஆனால், ‘டுவிட்டரின் அறிக்கை முற்றிலும் ஆதாரமற்றது, பொய்யானது. இது தனது முட்டாள்தனத்தை மறைத்து இந்தியாவை அவமதிக்கும் முயற்சி. இந்த துரதிருஷ்டமான அறிக்கையை இந்திய அரசு கண்டிக்கிறது’ என்று மீண்டும் மத்திய பாஜக அரசு மோதல் போக்கை தொடர்ந்துள்ளது.இந்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள தனியுரிமைக் கொள்கை
க்கு எதிராக, வாட்ஸ் ஆப் நிறுவனமும் நீதிமன்றத்தை நாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.