புதுதில்லி:
ரயில்வே பல்கலைக்கழக வாரியத்தில் இயக்குநராக இருப்பவருக்கே, பல்கலைக்கழகத்தின் காண்ட்ராக்ட் வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.9டாட்9 (9dot9) என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருப்பவர் பிரமநாத் ராஜ் சின்ஹா ஆவார். இவர், அசோகா பல்கலைக்கழகத்தின் நிறுவனர்கள் மற்றும் அறங்காவலர்களில் ஒருவராகவும், இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸின் டீனா-கவும் இருக்கிறார். மேலும், இந்திய ரயில்வே-யால் நடத் தப்படும் ரயில்வே பல்கலைக்கழக வாரிய உறுப்பினராகவும் உள்ளார்.
இந்நிலையில்தான், குஜராத் மாநிலம்வதோதராவில், ரயில்வே பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகத்திற்கு (National Rail and Transportation Institute -NRTI) ஆலோசனை வழங்குவதற்கான ரூ. 6 கோடி மதிப்பிலான காண்ட்ராக்ட்,பிரமநாத் ராஜ் சின்ஹாவின் ‘ஹரப்பா எஜூகேஷன்’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது.மாதந்தோறும் ரூ. 65 லட்சம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணத்துடன், டிசம்பர் 2021-ல் முடியும் ஒன்பது மாதங்களுக்கான காண்ட்ராக்ட்இதுவாகும். இதன்படி, ரயில்வே அதிகாரிகளுக்கு மேலாண்மை நடைமுறைகள் மற்றும்செயற்கை நுண்ணறிவு குறித்த பயிற்சியை சின்ஹாவின் ‘ஹரப்பா எஜூகேஷன்’ நிறுவனம் வழங்க உள்ளது. ரூ. 6 கோடியில் இதுவரை, சுமார் ரூ. 40 லட்சம் பணம் வழங்கப்பட்டும் விட்டது.
ரயில்வேயின் பொது நிதி விதிகளின் (GFR) படி, பணியமர்த்தப்பட்ட ஆலோசகர் மற்ற பணிகளுடனான முரண்பாடுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் மற்றும் அவரது சொந்த நிறுவன நலன்கள் மற்றும் எதிர்கால வேலைகளை கருத்தில் கொள்ளாமல் செயல்பட வேண்டும். ஏல நிறுவனம் அல்லது அதன் துணை நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று ஆலோசனை ஒப்பந்தத்தில்ஈடுபட்டிருந்தால் அது விதிமீறலும் ஆகும். எனவே, சின்ஹாவின் நிறுவனத்திற்கு ரயில்வே பல்கலைக்கழகத்தின் காண்ட்ராக்ட்வழங்கப்பட்டது சட்டவிரோதம் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.இது குறித்து சின்ஹாவிடம் ‘இந்தியன்எக்ஸ்பிரஸ்’ செய்தியாளர் கேட்டபோது, என்.ஆர்.டி.ஐ.யின் இடைக்கால துணை வேந்தர் அல்கா அரோரா மிஸ்ராதான் பதிலளிப்பதற்கு சரியான ஆள் என்று கூறி நழுவியுள்ளார். மிஸ்ராவை தொடர்பு கொண்டு பேசிய போது, அனைத்து ஒப்பந்தங்களும் முறையான விதிமுறைகளை பின்பற்றியே கையெழுத்திடப்பட்டது என்று ஒற்றை வரியில் முடித்துக் கொண்டுள்ளார்.
ஆனால், இந்த ரயில் மற்றும் போக்குவரத்து நிறுவனத்தின் ஒப்பந்தத்தை பிரமத் ராஜ் சின்ஹா பெறுவது முதல் முறையல்ல. இரண்டாவது முறையாகப் பெற்றுள்ளார். கடந்த ஆண்டும் ரயில்வே ஊழியர்களுக்கு மேலாண்மை மற்றும் செயற்கை
நுண்ணறிவுப் பயிற்சி அளிக்கும் ஒப் பந்தத்தை ஹரப்பா எஜுகேஷன் நிறுவனம்தான் பெற்றுள்ளது. எனவே, இதில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் மீது விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.