டேராடூன்:
கொரோனா தொற்றால், ஒவ்வொரு நாளும் 4 ஆயிரம் பேர் உயிரிழந்துவரும் நிலையில், அதனை ஒழித்துக் கட்டுவது எப்படி என்றுவழிதெரியாமல் நாடே திணறிக் கொண்டிருக்கிறது.
தடுப்பூசியை இலவசமாக வழங்க முடியாது என்று மத்திய பாஜக அரசு மக்களைக்கைவிட்டுவிட்ட நிலையில், படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை எனஅனைத்தையும் தாண்டி, மருத்துவர்கள்,செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தங்களின் உயிரைக் கொடுத்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ‘கொரோனா வைரசும் உலகிலுள்ள மற்ற உயிரினங்களைப் போல ஒன்றுதான். அதற்கும் இந்த உலகில் உயிர்வாழஉரிமை உண்டு’ என்று, பாஜக தலைவரும்,உத்தரகண்ட் மாநில மாநில முன்னாள் முதல்வருமான திரிவேந்திர சிங் ராவத் தடாலடியாக பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
‘உலகில் மனிதன் தன்னை மிகப்பெரிய உயிரினம் என்றும், தான் மட்டுமே இங்கு வாழ்வதற்கு தகுதியானவன் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறான். இந்த ஆணவத்தைப் போக்கவே, கொரோனா வைரஸ் உருவாகி இருக்கிறது. பல உருக்கள் மாறி மனிதனை ஓட ஓட விரட்டுகிறது’ என்றும் விஷத்தைக் கக்கியுள்ளார்.திரிவேந்திர சிங் ராவத்தின் இந்தப் பேச்சிற்கு, பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன.ராவத் இவ்வாறு பேசியிருப்பது உத்தரகண்ட் மாநிலத்திற்கே அவமானம் என்று அம்மாநில காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர். ‘மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்துகொண்டிருக்கும் வேளையில் இதுபோன்றுபேசுவது இறந்தவர்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது, ஒரு முன்னாள் முதல்வர் இப்படி பேசியிருப்பது துரதிர்ஷ்டவசமானது’ என்று இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் மருத்துவர் அஜய் கண்ணா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.