india

img

விவாதங்களை நாடாளுமன்றத்தில் நடத்தாமல் ‘டீ’ கடைகளிலா நடத்துவது? பெகாசஸ் விவகாரத்தில் மம்தா பானர்ஜி கேள்வி...

புதுதில்லி:
கொள்கை முடிவுகள் மீதான விவாதங்களை நாடாளுமன்றத்தில் நடத்தாமல் மோடி அரசு ஓடி ஒளிவதேன்? என்றுமேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிகேள்வி எழுப்பியுள்ளார்.

தில்லியில் எதிர்க்கட்சித் தலைவர் களை சந்தித்து வரும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதனன்றுகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு, மம்தா செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அதில், “2014 மக்களவைத் தேர்தலில் பாஜக-வின் முக்கிய முழக்கமாக இருந்த “அச்சே தின்”னை மேற்கோள் காட்டிப் பேசியிருக்கும் மம்தா, “மக்கள்போதுமான அளவுக்கு ‘அச்சே தின்’னைப்(நல்ல காலம்) பார்த்து விட்டார்கள். இனி நீங்கள்தான் (மோடி அரசு) “சச்சேதின்”னைப் (உண்மையான நாட்களை) பார்க்கப் போகிறீர்கள்..” என்று பிரதமர்மோடியை விமர்சித்துள்ளார்.

“நடந்துமுடிந்த மேற்குவங்கத் தேர்தலை, ‘ஆட்டம் தொடங்கிவிட்டது’ என்ற முழக்கத்துடன் திரிணாமுல் எதிர்கொண்டது. வரும் மக்களவைத் தேர்தலில் அந்த முழக்கம் நாடெங்கும் எதிரொலிக்கும்” என்று குறிப்பிட்டுள்ள மம்தா,பாஜக எண்ணிக்கை அளவில் பெரியதாக இருந்தாலும், எதிர்க்கட்சிகள் அரசியல் ரீதியாக வலிமையாக இருப்பதாகவும் அவை இணைந்தால் நிச்சயம் அது ஒரு வரலாறாக அமையும் என்றும்தெரிவித்துள்ளார்.மேலும், பெகாசஸ் விவகாரம் குறித்துப் பேசியுள்ள மம்தா, “பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் அவசரநிலையை விட மிகவும் தீவிரமானது. ஆனால் இதுகுறித்து மோடி அரசு எந்தப் பதிலையும் அளிக்காமல் மவுனம் சாதித்து வருகிறது” என்று குற்றம் சாட்டியதுடன், “கொள்கை முடிவுகள், விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெறவில்லை என்றால், டீக்கடைகளிலா நடைபெறும்?” என்றும் கேள்வி எழுப்பியுள் ளார். “மோடி அரசைத் தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில்திரள வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.