india

img

சிபிஐ அதிகாரிகள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிய தடை....

புதுதில்லி:
 சிபிஐ அதிகாரிகள் அலுவலக நேரத்தில் ஜீன்ஸ், டி.ஷர்ட் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.சிபிஐ.யின் புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் பொறுப்பேற்றது முதல் சிபிஐ அலுவலகங்களில் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த வகையில் அலுவலக நேரத்தில் ஆண் மற்றும் பெண் அதிகாரிகளுக்கான உடை மீது புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதன்படி ஆண் மற்றும் பெண் அதிகாரிகள்  ஜீன்ஸ் மற்றும் டி.ஷர்ட் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்கள், அரசு அதிகாரிகளின் அதிகாரப் பூர்வ அலுவலக முறைப்படியான உடைகளை அணிய வேண்டும், பெண்கள் சேலை அல்லது சுடிதார் அணிய வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.சிபிஐ அதிகாரிகளுக்கு மேற்கண்ட தடையுடன் அலுவலக நேரத்தில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கான காலணிகள் அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.