புதுதில்லி:
கொரோனா வைரஸ் தொற்றுமற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி பாதிக்கப்பட்ட நாட்டின் மக்களை காப்பதற்கு எந்த திட்டமும் இல்லாது மத்திய அரசின் பட்ஜெட் துரோகம் இழைத்துள்ளது என்றும் உழைக்கும் மக்களைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாத அதே சமயத்தில் கார்ப்பரேட்டுகளுக்கும், பணக்காரர்களுக்கும் மேலும் சலுகைகளை வாரி வழங்கியிருக்கின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் பேசினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று, பி.ஆர். நடராஜன் பேசியதாவது: மத்திய பட்ஜெட்டானது, கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று என்னும் நெருக்கடிக்கும், பொருளாதார மந்தம் என்னும் நெருக்கடிக்கும் ஆளான மக்களை எவ்விதத்திலும் காப்பதற்கு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காது துரோகம்
இழைத்திருக்கிறது. இக்கால கட்டத் தில் உழைக்கும் மக்களின் துன்ப துயரங்கள் அதிகரித்திருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு, விரல்விட்டு எண்ணக்கூடிய பெரும் வர்த்தக நிறுவனங்களின் நலன்களை மேம்படுத்துவதற்கு பாஜக அரசு அசைக்க முடியாத அளவிற்கு உறுதிபூண்டி ருக்கிறது என்பதற்கு இந்த பட்ஜெட் மிகச்சிறந்த உதாரணமாகும். இந்த பட்ஜெட்டில் படாடோபமாக பல அறிவிப்புகள் இருந்தபோதிலும், பொதுச் செலவினத்தை அதிகரித்திட அரசாங்கம் மறுத்திருப்பதில் இது நன்கு பிரதிபலிக்கிறது.
மாநிலங்களுக்கான நிதி குறைப்பு
2021-22 பட்ஜெட்டின் மொத்த செலவினம் 34.8 லட்சம் கோடி ரூபாய்களாகும். இது சென்ற ஆண்டின் பட்ஜெட் தொகைக்கு இணையாக இருக்கிறது. இதனை இப்போதுள்ள ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியுடன் ஒப்பிடும்போது, உண்மையான ரூபாய் மதிப்பீட்டில் (in real terms)சென்ற ஆண்டைவிடக் குறைவாகும். இது, இந்த அரசாங்கம், மக்களுக்கு அளிக்க வேண்டிய பொறுப்புகளிலிருந்து தன்னைமுழுமையாகக் கைகழுவிக் கொண்டுவிட்டது என்பதையே காட்டுகிறது. மேலும் அதே சமயத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் நாட்டின் சொத்துக்களைத் தங்கள்முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வழிதிறந்துவிட்டி ருப்பதையும் காட்டுகிறது. சமீபத்தில் முடிவடைந்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதம் நிதிப் பற்றாக்குறை (fiscal deficit) ஏற்பட்டிரு ப்பதற்கு, அரசுக்கு வரவேண்டிய வருவாய் சரிந்ததே காரணம் என்று அரசுத்தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் மூலமாக வரிகளைத் தொடர்ந்து உயர்த்தி, சாமானிய மக்களின் மீது சுமைகளைத் தொடர்ந்து ஏற்றிவந்த பின்பும் இந்த சரிவு ஏற்பட்டிருக் கிறது. மேலும், சென்ற ஆண்டு திருத்திய மதிப்பீட்டின்படி மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கிய பட்ஜெட் ஒதுக்கீட்டில் இந்த ஆண்டு 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் குறைந் திருக்கிறது.
கார்ப்பரேட்களுக்கு வரி குறைப்பு
சென்ற ஆண்டின் கார்ப்பரேட் மற்றும் வருமான வரிகள் மிகப்பெரியஅளவிற்குக் குறைக்கப்பட்டிருக் கிறது என்பது மட்டுமல்ல, கார்ப்ப ரேட்டுகளும், பணக்காரர்களும் கோவிட்-19 காலத்திற்கு முன்பிருந்த வரிகளைக் கூட செலுத்தத் தேவையில்லை என்று கூறக்கூடிய அளவிற்குச் சென்றிருக்கிறது. 2020-21 இல் கார்ப்பரேட் வரி மற்றும் வருமான வரிக்கான பட்ஜெட் மதிப்பீடுகள் முறையே 6.81 மற்றும் 6.38 லட்சம் கோடி ரூபாயாக இருந்த அதே சமயத்தில், இப்போது 2021-22க்கான பட்ஜெட் மதிப்பீடுகள் முறையே 5.47 மற்றும் 5.61 லட்சம் கோடி ரூபாய் களாகும். இப்போது இந்த அரசாங்கம் நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் விற்பதற்கும், லாபம் ஈட்டும்பொதுத்துறை நிறுவனங்களை யும்கூட தனியாரிடம் தாரை வார்த்திடவும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பட்ஜெட்டில், பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுப்பாடு களில் இருந்துவரும் விலை மதிக்கமுடியாத நிலங்களையும் விற்பதற்குநடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு சுமார் 1.75 லட்சம் கோடிரூபாய் திரட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை74 சதவீத அளவிற்கு உயர்த்திட வும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இவை மிகவும் ஆட்சேபகரமானவை களாகும். இவ்வாறு தனியாரிடம்
தொடர்ச்சி 3ம் பக்கம்