india

img

விராபின்  மருந்துக்கு அனுமதி....

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு ஜைடஸ் நிறுவனம் தயாரித்துள்ள விராபின் எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

விராபின், லேசான அறிகுறியால் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் வெற்றிகரமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆன்டிவைரலுடன்  சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளி களில் 91.15 சதவீதம் பேர் 7 நாளுக்குள் ஆர்டி-பி.சி.ஆர்சோத்னையில்  கொரோனா தொற்று இல்லை என கண்டறியப் பட்டது. இந்த சிகிச்சை யானது நோயாளிகளுக்கு துணை ஆக்ஸிஜனின் மணிநேரத்தையும் குறைக்கிறது