பாட்னா:
பீகார் மாநிலத்தில் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை கட்டுமானப் பணிகளைத் துவங்காமல் மோடி அரசு தாமதம் செய்து வருவதைக் கண் டித்து, தர்பங்கா பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
வீடு, வீடாக செங்கற்களை நன் கொடையாக பெற்று, அவற்றை ஒன்றிய பாஜக அரசுக்கு அனுப்பி வைக்கப்போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.மறைந்த அருண் ஜெட்லி, கடந்த2015-ஆம் ஆண்டு ஒன்றிய நிதியமைச்சராக இருந்தபோது, பீகாரில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்றுகூறினார். அதன்பிறகு, 2019 மக்களவை தேர்தலின் போது, தர்பங்கா எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாகவே மோடிஅரசு வெளியிட்டது. அமைச்சரவைக் கூட்டத்திலும் பிஎம்எஸ்எஸ்ஒய் (PMSSY) திட்டத்தின் கீழ், ரூ. 1264கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. 2020 செப்டம்பர் மாதம் கட்டுமானப் பணிகள் துவங்கி, 2024-ஆம் ஆண்டிற்குள் மருத்துவமனை பயன் பாட்டிற்கு வரும் என்று ஜம்பமாக கூறியது. ஆனால், தற்போதுவரை எந்தவொரு பணிகளும் தர்பங்காவில் துவங்கப்படவில்லை.
ஆனால், தர்பங்காவுக்கு பின்னர் அறிவிக்கப்பட்ட நாக்பூர், கோரக்பூர், தெலுங்கானா, தியோகர், கவுகாத்தி மற்றும் பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கான பணிகள் துவங்கி விட்ட நிலையில், பீகார் மக்கள் அதிருப்திஅடைந்தனர்.இந்நிலையில்தான், தர்பங்காவை சேர்ந்த மிதிலா மாணவர் சங்கம்(MSU) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடந்த ஆகஸ்ட் 1 முதல் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். எய்ம்ஸ் (AIIMS) என்று எழுதப்பட்ட செங்கற் களை கையில் ஏந்தியவாறே, வீடு, வீடாகச் சென்று பொதுமக்களிடம் செங்கல் சேகரித்து வரும் அவர்கள், ஒரு லட்சம் செங்கற்கள் சேர்ந்தவுடன் அவற்றை மோடி அரசுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர். இதுவரை 30 ஆயிரம் செங்கற்களை அவர்கள் திரட்டியுள்ளனர்.தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள தோப்பூரிலும், இதேபோல 2019 ஜனவரி 27-ஆம் தேதி பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். 45 மாதங்களில் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்று கூறினார். ஆனால், 31 மாதங்கள் கடந்தும் கூட எந்தப் பணியும் நடக்கவில்லை. இதனைக் குறிப்பிடும் வகையில், அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ‘எய்ம்ஸ்’ என்று எழுதப்பட்ட ஒற்றைச் செங்கல்லை வைத்து மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.