india

img

பெகாசஸ் விவகாரத்தில் உண்மை வெளிவரவேண்டும்... ஜிதன்ராம் மாஞ்சியும் களமிறங்கினார்...

பாட்னா:
பெகாசஸ் மென்பொருள் மூலம் அரசியல் கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் வேவு பார்க்கப்பட்டதாக கூறப் படும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று முன்பு எதிர்க்கட்சிகள் மட்டுமே வலியுறுத்தி வந்தன.

தற்போது பாஜக கூட்டணியிலிருக்கும் கட்சிகளும் பெகாசஸ் விவகாரத்தை எழுப்ப ஆரம்பித்துள்ளன. “பெகாசஸ் மென்பொருள் மூலம் வேவு பார்க்க முயற்சிமேற்கொள்ளப்பட்டிருந்தால், அதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள நாடாளுமன்றத்தில் இப்பிரச்சனை பற்றிவிவாதிக்கப்பட்டாக வேண்டும். விவாதம் மட்டுமல்ல; விசாரணை நடத்த வேண்டும்” என்றுகோரிக்கையை பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் தலைவருமான நிதிஷ் குமார் இரண்டுநாட்களுக்கு முன்பு பகிரங்கமாகவே செய்தியாளர்கள் மத்தியில் கூறியிருந்தார்.இந்நிலையில், பீகார் மாநிலத்தின் மற்றொரு முன்னாள் முதல்வரும், பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்துஸ் தானி அவாம் மோர்ச்சா-வின்தலைவருமான ஜிதன் ராம்மாஞ்சியும் பெகாசஸ் விவகாரத் தில் விசாரணையைக் கோரியுள்ளார்.

“இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் பாதிக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தால், பெகாசஸ் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். யார் வேவு பார்த்தார்கள் உள்பட உண்மைகளை கண்டறிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்”என்று கூறியுள்ளார். பாஜகவுக்கு, கூட்டணிக் கட்சிகள் மத்தியிலிருந்தே நெருக்கடி உருவாகஆரம்பித்துள்ளது.