பீகாரின் சாசராம் நகரில் இருந்து நாளை (ஆகஸ்ட் 17) காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் “வாக்கு அதிகார யாத்திரை” தொடங்க உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் பட்டியல் திருத்தம், வாக்குரிமை பாதுகாப்பு, தேர்தலில் ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றை மக்களிடம் எடுத்துச் செல்லும் முயற்சியாக நாளை முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை 16 நாட்கள் வாக்கு அதிகார யாத்திரை செல்ல உள்ளார்.
நாளை பீகாரின் சாசராம் நகரில் தொடங்கும் இந்த யாத்திரை பல்வேறு வட மாநிலங்களை நடைபெறவுள்ளது. மேலும் இதில் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.