பாட்னா:
பீகார் மாநில பாஜக எம்.பி. ராஜீவ்பிரதாப் ரூடி, கடந்த 2019-ஆம் ஆண்டுநாடாளுமன்ற உறுப்பினர் நிதியில்இருந்து வாங்கப்பட்ட 30 ஆம்புலன்சுகளை, சரண் மாவட்டம் அம்னவுர் பகுதியில் தனக்குச் சொந்தமான இடத்தில் பேனர் துணிகளால் ஓராண்டுக்கும் மேலாகமறைத்து வைத்திருந்தது, கடந்த மாதம்வெளிச்சத்திற்கு வந்தது.
இந்நிலையில், பீகாரின் சிவான் மாவட்டத்திலும் ஆம்புலன்சுகள் வாங்கியதில் பல லட்சம் ரூபாய் ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு கொரோனா உச்ச நிலையில் இருந்தபோது சிவான் மாவட்டத்தில் 7 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட் டுள்ளன. இதன் விலை சந்தையில் வெறும் 7 லட்ச ரூபாய்தான் என்ற நிலையில், அதனை 3 மடங்கு அதிகமாக விலைகொடுத்து- ஒவ்வொரு ஆம்புலன்சையும் தலா ரூ. 21 லட்சத்து 84 ஆயிரத்திற்கு ‘இந்திரஷன் டிரேடிங் கம் பெனி’ என்ற நிறுவனத்திடமிருந்து வாங்கியுள்ளனர். 7 ஆம்புலன்ஸ்சுகளின் விலை மொத்தமே 49 லட்சம்தான். ஆனால், சுமார் ரூ. 1 கோடியே 53 லட்சம் கொடுத்துள்ளனர்.
முதலமைச்சரின் பிராந்திய வளர்ச்சிநிதியத்தின் கீழ், இதேபோல பல்வேறு மாவட்டங்களில் 21 ஆம்புலன்சுகள் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதான் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.இவ்வாறு மூன்று மடங்கு அதிகவிலை கொடுத்து குளிரூட்டப்பட்ட ஆம்புலன்ஸாக மாற்றப்பட்ட அனைத்துமாருதி வாகனங்களும் இப்போதுவரை சிவான் மற்றும் ஹசன்பூர் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு ஆயுர் வேத கல்லூரி மருத்துவமனை மைதானத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அவலமும் அம்பலமாகியுள்ளது.ஆம்புலன்சைப் போலவே, சிகிச் சைக்கான மருத்துவக் கருவிகள் வாங்கியதிலும் ஊழல் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான வெண்டிலேட்டர்கள் தலா ரூ. 3 லட்சத்து 41 ஆயிரம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளன. ரூ. 31ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் தலா 1 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் கொடுத்தும், வெறும் 8 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே செலவாகும் உறிஞ்சும் இயந்திரங்கள், தலா 33 ஆயிரம் ரூபாய் கொடுத்தும் வாங்கப்பட் டுள்ளன.இந்த ஊழல் முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்துள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் முன்னாள் அமைச்சர் விக்ரம் குன்வர், இவற்றின் மீது முதல்வர் நிதீஷ் குமார் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.