பெங்களூரு,மே.21- புக்கர் விருதினை பெற்று வரலாறு படைத்துள்ளார் பிரபல கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக்
எழுத்தாளர், சமூக ஆர்வலர் மற்றும் வழக்குரைஞர் என பன்முகத்தன்மை கொண்டவரான பானு முஷ்டாக் கன்னடத்தில் எழுதிய 'ஹசீன் அண்ட் அதர் ஸ்டோரிஸ்' என்ற புத்தகத்தை, பத்திரிகையாளரான தீபா பாஸ்தி என்பவர், ஆங்கிலத்தில் 'ஹார்ட் லேம்ப்' என்ற பெயரில் மொழி பெயர்த்தார்.
1990 முதல் 2023 வரையிலான முப்பது ஆண்டுகளில் முஷ்டாக் எழுதிய 12 சிறுகதைகளைக் கொண்ட ஹார்ட் லேம்ப், தென்னிந்தியாவில் வாழும் முஸ்லிம் பெண்களின் கஷ்டங்களை அழுத்தமாகப் படம்பிடிக்கிறது
இந்த நூலுக்கு தற்போது புக்கர் பரிசு அறிவிகப்பட்டுள்ளது. இதன்மூலம் சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் கன்னட எழுத்தாளர் என்ற பெருமையை பானு முஷ்டாக் பெற்றுள்ளார்.