சண்டிகர் ஹரியானா சட்டமன்றத் தேர் தலில் காங்கிரஸ்-ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
ஹரியானாவில் அக்டோபர் 5-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவ தற்கான சாத்தியக்கூறுகள் இருக்கி றதா என காங்கிரஸ் தலைவர்களிடம் ராகுல் காந்தி கருத்து கேட்டார். இதன் மூலம் ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து பாஜகவை எதிர்கொள்ள ராகுல் காந்தி தீவிரம் காட்டுவதாக தகவல் வெளியானது.
இந்த கருத்தை ஆம் ஆத்மி மாநி லங்களவை எம்.பி. சஞ்சங் சிங் வர வேற்றிருந்தார். அத்துடன் மற் றொரு மாநிலங்களவை எம்.பி. ராகவ் சந்திரா, காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபாலுடன் 2 கட்ட பேச்சுவார்த்தையில் ஈடு பட்டார். இந்த சந்திப்பு இன்னும் நீடிக்கலாம் என கூறப்படுகிறது.
2 கட்ட பேச்சுவார்த்தையின் போது, ஹரியானாவில் 10 மக்கள வை தொகுதிகள் உள்ளன. ஒரு தொ குதிக்கு ஒரு சட்டமன்ற தொகுதி என்ற அடிப்படையில் 10 இடங்கள் எங்க ளுக்கு ஒதுக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி சார்பில் வலியுறுத்தப் பட்டுள்ளது. அதேவேளையில் 7 தொ குதிகள் மட்டுமே தரமுடியும் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால் பேச்சு வார்த்தை நீடிக்கும் என தெரி விக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே 90 இடங்களில் 66 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலுக்கு மத்திய தேர்தல் குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் தீப் பபாரியா ‘‘இரு கட்சிகள் இடையிலான பேச்சு வார்த்தை தொடக்க நிலையில்தான் உள்ளது. இன்னும் ஏராளமான விஷயங்கள் குறித்து ஆராய வேண்டியுள்ளது. 90 இடங்களில் 49 இடங்கள் குறித்து 2 நாட்கள் ஆராயப்பட்டன. மொத்தமாக 66 இடங்களுக்கு வேட்பாளர்கள் பெயர் இறுதி’’ என்றார்.
ஆம் ஆத்மியின் மாநிலங்க ளவை எம்.பி. சஞ்சய் சிங் கூறுகை யில், ‘‘கூட்டணி தொடர்பாக, இடங் கள் தொடர்பாக என எந்தவொரு முடிவு என்றாலும், அதை அரவிந்த் கெஜ்ரிவால்தான் எடுப்பார்’’ என்றார். காங்கிரஸ்-ஆம் ஆத்மி கூட்டணி அமைந்தால் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் பாஜகவுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது.