மும்பை
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 6 தொகுதிகளுக்கான சட்ட மேலவைத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவு இன்று (வெள்ளி) இன்று அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் பரபரப்பாக கணிக்கப்பட்ட இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி 4 இடங்களை கைப்பற்றி அசத்தி பாஜகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. பாஜக ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த தேர்தல் முடிவு மத்தியில் பாஜகவிற்கு பெரும் பின்னவடைவாக கருதப்படுகிறது. காரணம் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் அமைத்துள்ள நாக்பூர் பட்டதாரி தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றி பாஜகவிற்கு செக் வைத்துள்ளது தான்.இந்த தொகுதி பாஜகவின் நட்சத்திர தொகுதியாக வர்ணிக்கப்படுகிறது. காரணம் முன்னாள் முதல்வரும், மகாராஷ்டிரா எதிர்கட்சித் தலைவருமான தேவேந்திர பட்னாவிஸின் தந்தை கங்காதர ராவ் அவர்களின் தொகுதி தான் நாக்பூர். இந்த தொகுதியை காங்கிரஸ் பறித்து பாஜகவை திகைப்படைய செய்துள்ளது.