india

img

மிசோரம் முதல்வராக லால்துஹோமா பதவியேற்பு!

மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கத்தின் (ZPM) தலைவர் லால்துஹோமா அம்மாநில முதல்வராக இன்று பதவியேற்றார்.
மிசோரம் மாநிலத்தில் 40 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த நவம்பர் 7-ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. இத்தேர்தலில் லால்துஹோமா தலைமையிலான ஜோராம் மக்கள் இயக்கம் கட்சி 27 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில், ZPM தலைவர் லால்துஹோமா அம்மாநில முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் ஹரிபாபு கம்பம்பட்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.