ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்கா நாடுகளுக்கு செல்பவர்களும், அங்கிருந்து வருபவர்களும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ஒன்றிய சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்கா நாடுகளுக்கு செல்பவர்களும், அங்கிருந்து வருபவர்களும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ஒன்றிய சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
சென்னை கிண்டி கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை துறைமுகம் சுகாதார நிறுவனம், தூத்துக்குடி துறைமுக சுகாதார மையம் ஆகிய இடங்களில் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.