india

img

தீக்கதிர்முக்கிய செய்திகள்

அம்பேத்கரை அவமதித்த அமித் ஷாவை ராஜினாமா செய்யக் கோரினோம். ஆனால் பாஜக பொய்யான எப்ஐஆர் மூலம் நாட்டின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றது. அமித் ஷா தனது பதவியை ராஜினாமா செய்து, மன்னிப்புக் கேட்க வேண்டும் என “இந்தியா” கூட்டணி ஒன்றுபட்டு போராடி வருகிறது. 

காங்கிரஸ் எம்.பி., கவுரவ் கோகோய்

பிரதமர் மோடிக்கு பைத்தியம் 
பிடித்து விட்டது. “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டம் சாத்தியமில்லாதது. “ஒரே நாடு ஒரே தேர்தல்” தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேறினால், அதற்கு எதிராக நிச்சயம் நான் நீதிமன்றத்தை நாடுவேன்.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி

பீகார் துணை முதல்வராக இருக்கும் சாம்ராட் சவுத்ரி பயனற்றவர். பணம் மற்றும் அதிகாரத்திற்காகவே துணை முதல்வர் பதவியில் உள்ளார். பீகார் மாநிலத்தில் குற்றத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாஜக - ஜேடியு அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது.

பீகார் எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி

நாட்டை ஆட்சி செய்வது அரசு அல்ல. தீவிர இந்து பயங்கரவாத அமைப்பு. அந்த அமைப்பு தான் முழு இந்தியாவையும் நாசமாக்கி அழிக்கின்றது. நாட்டை ஆளும் இந்து பயங்கரவாத அமைப்பு எவ்வளவு நாள் அதிகாரத்தில் தாக்குப்பிடிக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

சமாஜ்வாதி எம்எல்ஏ சுரேஷ்

லக்னோ

காலிஸ்தான் ஆதரவாளர்கள் 3 பேர் சுட்டுக்கொலை

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் புரான்பூர் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை நடந்த என்கவுண்டரில் காலிஸ்தான் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஞ்சாப்காவல்துறை மற்றும் உத்தரப்பிரதேச அதிரடி படையினர் கூட்டாக இணைந்துஇந்த என்கவுண்டரை நிகழ்த்தியுள்ளனர்.