india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மூவாற்றுப்புழை, நேமத்தில் பாஜகவை வீழ்த்தி சரிவில் இருந்து மீண்டதே எல்டிஎப் வரலாறு

திருவனந்தபுரம், ஜுன் 6- கேரளத்தில் மூவாற்றுப்புழை யிலும் நேமத்திலும் பாஜகவை வீழ்த்தி யதும் சரிவில் இருந்து மீண்டதுமே இடது ஜனநாயக முன்னணியின் (எல்டிஎப்) வரலாறு. 

மக்களவைத் தேர்தல் முடிவு களுக்குப் பிறகு, கேரளத்தில் எல்.டி.எப்-இன் தோல்விக்குக் காரணம் பினராயி விஜயன் ஆட்சிக்கு எதிரான  மக்களின் உணர்வும் மார்க்சிஸ்ட் கட்சி யினரிடையே ஒருவித ஆணவம் ஏற்  பட்டு விட்டதுமே காரணம் என்று திட்ட மிட்ட அவதூறு கிளப்பப்பட்டுள் ளது. எந்த வீழ்ச்சியிலிருந்தும் மீண்டு  வந்த இடதுசாரிக் கட்சிகளின் வர லாற்றை அவர்கள் மறந்துவிடுகிறார் கள். எல்டிஎப் இரண்டு, மூன்று இடங்க ளைப் பெற்றபோது மட்டுமல்ல, எந்த  இடமும் கிடைக்காதபோதும் மக்கள் ஆதரவைப் பெற்ற வரலாறு உள் ளது.

2019 மக்களவைத் தேர்தல் முடிவு களுக்குப் பிறகு நடைபெற்ற உள்  ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தல் கள் தான், எல்டிஎப் சமீபத்தில் மீண்டு  வந்த வரலாறு. 2019 இல், சில ஊட கங்கள் அதை ‘மீள முடியாத வீழ்ச்சி’  என்று மதிப்பிட்டிருந்தன. ஆனால் மக்  கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு கண்டு இடதுசாரிகள் மீண்டு வந்தனர். இம்முறையும் ‘நிலை வேறு இல்லை’ என எல்.டி.எப் தலைவர்கள் தெளிவு படுத்தியுள்ளனர்.

முதல்வரின் குடும்பம், சுகாதாரத் துறை, சிவில் சப்ளைஸ் மற்றும் கூட்டு றவுத் துறைக்கு எதிராக திட்டமிட்ட பிரச்சாரம் இக்காலத்தில் கட்ட விழ்த்து விடப்பட்டது. உச்சநீதிமன்றம் உட்பட ஒன்றிய அரசின் நிலை குறித்து கேள்வி எழுப்பிய போதிலும், நிதி  நெருக்கடியின் காரணத்தை பினராயி  அரசின் தலையில் திணிக்க முயன்ற னர். ஆனால் நெருக்கடியான நிலை யிலும் அரசு மக்களுக்கு உதவி செய்து  வளர்ச்சித் திட்டங்களைச் செயல் படுத்தியது.

கேரளத்தில் பாஜகவின் முதல்  வெற்றியாக திருச்சூரைக் கொண்டா டுவது, வரலாற்றை மறைப்பதாகும். 2004இல் பி.சி.தாமஸ் மூவாற்றுப் புழாவில் இருந்து மக்களவைக்கும், 2016இல் ஓ.ராஜகோபால் நேமத்தில் இருந்து சட்டசபைக்கும் பாஜக சார் பில் வெற்றி பெற்றனர். அப்போதும் கேரளத்தை பாஜக கைப்பற்றும் என  கணித்தவர்கள் உண்டு. அந்த கணக்கு களை அடுத்த தேர்தலில் பூட்டிய வர லாறும் கேரளாவுக்கே சொந்தம்.

தேசாபிமானியில் தினேஷ் வர்மா

புதுதில்லி
தில்லிக்கு கூடுதல் 
நீர் திறக்க ஹரியானா, இமாச்சலப்பிரதேசத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பாஜக ஆளும் ஹரியானா அரசு  திட்டமிட்டு கங்கை நீரை நிறுத்தியதால், நாட்டின் தலை நகர் பகுதியான தில்லி கடும் குடிநீர் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளது. குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ஆளும் ஆம்  ஆத்மி அரசு டேங்கர் லாரி மூலம் குடிநீர்  வழங்கி சமாளித்து வருகிறது. தில்லியின்  சில பகுதிகளில் ஒரு நாளைக்கு ஒரு டேங்  கர் லாரி மட்டுமே அனுப்பப்படுவதால் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்தி ருந்து குடிநீர் பிரச்சனையை சமாளித்து வருகின்றனர். இந்நிலையில், நீர் பற்றாக்  குறையால் பாதிக்கப்பட்டுள்ள தில்லிக்கு  கூடுதல் நீர் திறக்க ஹரியானா உள்ளிட்ட  அண்டை மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தில்லி  அரசு மனுதாக்கல் செய்தது.  இந்த மனு வின் இரண்டாம் கட்ட விசாரணையின் முடிவில்,தில்லிக்கு கூடுதல் நீர் திறக்க  ஹரியானா, உத்தரப்பிரதேசம், இமாச் சலப்பிரதேசத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவனந்தபுரம்
96 சட்டமன்ற தொகுதிகளில் யுடிஎப் வாக்குகளை இழந்தது

கடந்த மக்களவைத் தேர்தலுடன் (2019) ஒப்பிடுகையில், இம்முறை 96 தொகுதிகளில் யுடிஎப் வாக்கு களை இழந்துள்ளது. ஒன்பது மக்கள வைத் தொகுதிகளில் அங்குள்ள 7 சட்ட மன்ற தொகுதிகளிலும் யுடிஎப் வாக்கு களை இழந்துள்ளது. ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாட்டில் யுடிஎப் ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் வாக்குகளை இழந்தது. இதுபோல் திருவனந்தபுரம், ஆற்றிங்கல், கொல்லம், மாவேலிக்கரா, கோட்டயம், இடுக்கி, சாலக்குடி, திருச் சூர், ஆலத்தூர் ஆகிய தொகுதிகளில், 2019 ஆம் ஆண்டை விட யுடிஎப் வாக்கு  சதவிகிதம் குறைந்துள்ளது.

கண்ணூரில் கண்ணங்காடு, அழிக்  கோடு, கண்ணூர், தர்மடம், பேராவூர், வட கரையில் தலச்சேரி, நிலம்பூர், மானந்த வாடி, சுல்தான் பத்தேரி, கல்பற்றா, ஆலத்  தூரில் உள்ள திருவம்பாடி, சித்தூர், நென்மாரா, ஆலத்தூர், சேலக்கரை, குன்னம்குளம், வடக்கஞ்சேரி, திருச்சூர் தொகுதியில் உள்ள மணல்லூர், ஓரூர், மணல் நாட்டிகா, இரிஞ்ஞாலக்குடா, புதுக்காடு, சாலக்குடி தொகுதியில் கொடுங்கல்லூர், பெரும்பாவூர், அங்க மாலி, ஆலுவா, குன்னத்துநாடு, எர்ணா குளம் தொகுதியில் பரவூர், வைப்பின்,  கொச்சி, திருப்புனித்துறை, எர்ணாகுளம், இடுக்கியில் மூவாற்றுப்புழா, கொத்த மங்கலம், தேவிகுளம், இடும்பஞ் சோலை, பாலா, காட்டுருர்த்தி, வைக்கம்,  ஏற்றுமானூர், புதுப்பள்ளி, கோட்டயம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் குறை வான வாக்குகளை பெற்றுள்ளது.

பத்தனம்திட்டாவில் உள்ள காஞ்சி ரப்பள்ளி, பூஞ்சார், திருவல்லா, ரன்னி, ஆரன்முலா, கொன்னி, ஆலப்புழாவில் அரூர், ஆலப்புழா தொகுதியில் அம்ப லப்புழா, ஹரிபாட், காயம்குளம், கரு நாகப்பள்ளி, சங்கனங்கரை குன்னத்தூர், கொட்டாரக்கரா, பத்தனாபுரம், கொல் லம் தொகுதியில் சவர, புனலூர், சடைய மங்கலம், குந்தாரா, கொல்லம், இரவி புரம், சாத்தன்னூர், ஆற்றிங்கல் தொகுதி யில் நெடுமங்காடு, சிற்றின்கீழ், வாமன புரம், அருவிகரை, கட்டாக்கடை, திரு வனந்தபுரம் தொகுதியில் கழக்கூட்டம், வட்டியூர்காவு, நெய்யாற்றின்கரை, திருவனந்தபுரம், நேமம், கோவளம், பாற சாலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கடந்த முறை பெற்றதைவிடக் குறைவான  வாக்குகளையே யுடிஎப் பெற்றுள்ளது.

மும்பை
‘பாஜகவின் பிம்பம் நொறுங்கியது’

உத்தவ் தாக்கரே விளாசல்

மக்களவை தேர்தலுக்கு முன் மகா ராஷ்டிராவில் சிவசேனா, தேசிய வாத காங்கிரஸ் கட்சிகளை உடைத் தும், எதிர்க்கட்சிகளை தலைவர்களை விலைக்கு வாங்கியும் பாஜக - சிவசேனா  (ஷிண்டே) - தேசியவாத காங்கிரஸ் (அஜித்) கூட்டணி பல்வேறு சித்து விளை யாட்டுகளை அரங்கேற்றியது. ஆனால்  காங்கிரஸ் - சிவசேனா (உத்தவ்) - தேசிய வாத காங்கிரஸ் (சரத்) உள்ளடக்கிய “இந்  தியா” கூட்டணி, பாஜக கூட்டணியின் சித்து  விளையாட்டுகளையெல்லாம் சுக்கு நூறாக நொறுக்கி மொத்தமுள்ள 48 இடங்  களில் 30 இடங்களை கைப்பற்றியது.

மகாராஷ்டிரா மக்கள் அளித்த பிரம்  மாண்ட வெற்றியை “இந்தியா” கூட்டணி கட்சி தலைவர்கள், ஊழியர்கள் மாநி லம் முழுவதும் கொண்டாடி வரும் நிலை யில், கொண்டாட்டத்துக்கு இடையே சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே செய்தி யாளர்கள் சந்திப்பின் பொழுது,”பாஜக தோற்கடிக்க முடியாத கட்சி என்ற பொய்  யான பிம்பத்தை அக்கட்சியினா் உரு வாக்கி வைத்திருந்தனா். ஆனால் அக்  கட்சியை தோற்கடிக்க முடியும் என்பது  இந்த மக்களவைத் தோ்தலில் உறுதியாகி விட்டது. மக்களவை தேர்தலோடு பாஜக வின் பிம்பம் நொறுங்கியது” என அவர்  கூறினார்.


 

 

;