தில்லியில் நடைபெற்றும் வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு பிரபல மல்யுத்த வீரர் ’தி கிரேட் காளி’ ஆதரவு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் 7வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொட்டும் பனியிலும் இரவு முழுவதும் சாலையிலேயே தங்கி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். நேற்றைய தினம் மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இன்று விவசாயிகள் தங்கள் போராட்டங்களை பல இடங்களில் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், பஞ்சாப்பை சேர்ந்த பிரபல மல்யுத்த வீரரான “தி கிரேட் காளி” டிக்ரி எல்லையில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு நேரடியாக சென்ற அவர் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்துப் பேசினார்.
இதுகுறித்து அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் “ஜெய் ஜவான், ஜெய் கிசான்” என பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ, தற்பொழுது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.