india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தில்லியில் உள்ள தீப்சந்த் பந்து மருத்துவமனை, தாதா தேவ் மருத்துவமனை, ஹெட்கேவார் மருத்துவமனை மற்றும் குருதாக் பகதூர் (ஜிடிபி)  மருத்துவமனை ஆகிய நான்கு மருத்துவமனை களுக்கு செவ்வாயன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

பாலியல் பலாத்காரம் மற்றும் பெண் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கர்நாடக முன்னாள்  அமைச்சரும், மதச்சார்பற்ற மூத்த தலைவருமான ஹெச்.டி.ரேவண்ணாவுக்கு திங்களன்று சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நிலை யில், செவ்வாயன்று பெங்களூருவில் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து அவர் வெளியே வந்தார்.

“தனது 70 ஆண்டு கால ஆட்சியில் காங்கிரஸ் உரு வாக்கியவற்றை, தனது கோடீஸ்வர நண்பர்களிடம் ஒப்படைத்தவர் பிரதமர் மோடி” என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ராட்சத  விளம்பரப் பதாகை சரிந்த விபத்தில் இது வரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதில் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

“தில்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க சென்ற போது அவரது இல்லத்தில் முதல்வரின் தனிச் செயலாளர், எம்பி சுவாதி மாலிவாலை தாக்கி யது உண்மைதான்” என எம்பி சஞ்சய் சிங் தெரி வித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வெறுப்பு பிரச்சாரம் மேற்கொண்டதாகவும், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும் கூறி 6 ஆண்டுகள் தேர்த லில் போட்டியிட தடை விதிக்க கோரி தாக்கல் செய்த  மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாயன்று தள்ளு படி செய்தது.

புதுதில்லி
பிரதமர் மோடி மீது நடவடிக்கையாம்!
தேர்தல் ஆணையம் தகவல்


தோல்வி பயத்தால் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் இந்து - முஸ்லிம் மக்களி டையே வன்முறையை தூண்டும் வகை யிலும், பெண்களின் தாலி குறித்தும், பாகிஸ்தான் குறித்தும், எதிர்க்கட்சிகள் மீது போலி குற்றச்சாட்டுகளை முன் வைத்தும் வெறுப்புப் பிரச்சாரம் மேற் கொண்டு வருகிறார். இதுதொடர்பாக நட வடிக்கை எடுக்கக்கோரி “இந்தியா” கூட்ட ணிக் கட்சிகள் பலமுறை தேர்தல் ஆணை யத்திடம் புகார் அளித்த பொழுதிலும்  தேர்தல் ஆணையம் கண்டுகொள்ள வில்லை. இந்நிலையில், கடந்த வாரம்  காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கி ரஸ் உள்ளிட்ட “இந்தியா” கூட்டணிக் கட்சி யினர், தேர்தல் விதிகளை மீறி வெறுப் புப் பேச்சுக்களை பேசி வரும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி  இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் நேரில் சென்று புகார் அளித்தனர்.

இந்நிலையில், “இந்தியா” கூட்டணி  புகாரால் வெறுப்புப் பேச்சு விவகாரத்தில்  பிரதமர் மோடி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என செவ்வாயன்று இந்  திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள் ளது. மேலும் ராகுல் காந்தி பேச்சு குறித்து  விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் தலை வர் மல்லிகார்ஜுன  கார்கேவுக்கும், மோடி  பேச்சு குறித்து விளக்கம் அளிக்குமாறு நட்டாவுக்கும் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியது மற்றும் விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸ் குறித்து கார்கே, நட்டா அளித்த பதில்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தக வல் கூறியுள்ளது.

புதுதில்லி
முன்கூட்டியே தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை

நாட்டில் தென்மேற்கு மற்றும் வட கிழக்கு பருவமழை ஆகிய இரண்டு பருவகாலங்கள் தேவைப்படும் மழையைத் தருகிறது. வட கிழக்குப் பருவமழை அக்டோபர் இரண்  டாம் வாரத்தில் தொடங்கி டிசம்பர் இறுதி வரையும், தென்மேற்கு பருவமழை ஜூன்  முதல் வாரத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். 

தென்மேற்குப் பருவமழை மே இறுதி வாரத்தில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என்றாலும்,  கடந்த  ஆண்டு அரபிக் கடலில் நிலவிய காற்று  சுழற்சி காரணமாக பருவமழை  தாமத மாக தொடங்கியது. இதனால் கடும் வறட்சி வாட்டி வதைத்து வரும் நிலை யில் இந்த ஆண்டு சற்று முன்கூட்டியே மே 19 அன்றே,அதாவது 10 நாட்களுக்கு முன்பே தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது. 

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பில்,”தென் மேற்கு  பருவமழை மே 19 அன்றுக்குள் தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்காள  விரிகுடா பகுதிகளில் தொடங்க வாய்ப்புள்ளது. கேரளாவில் வழக்கத்தை  விட சற்று முன்னதாகவே மே மாத  இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில்  தென்மேற்கு பருவமழை தொடங்க லாம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை வழக்கத்தை விட அதிகமாக பெய்  யக்கூடும்” என கூறப்பட்டுள்ளது.
 

;