இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் நடத்தி வரும் இனப் படுகொலையை கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் தில்லி ஜந்தர் மந்தரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.