india

img

சூரிய ஒளியில் இயங்கும் மின் சாதனங்கள் திருச்சி என்.ஐ.டி.யில் கண்டுபிடிப்பு

திருச்சிராப்பள்ளி, மே 18 - திருச்சி என்.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சி.டி.ஏ.சி. ஆராய்ச்சியா ளர்கள் இணைந்த குழு எளி மையான, சிக்கனமான, கைய டக்கமான, திறன் வாய்ந்த சூரிய ஒளியில் இயங்கக் கூடிய மின் சாதனங்களை உருவாக்கியுள்ளது. 

இதில் சமூகத்தின் தற்போ தைய தினசரி தேவைகளான சூரிய ஒளியில் இயங்கக்கூடிய கையடக்க மொபைல் சார்ஜர் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சோலார் பேனல்களுடைய தெரு விளக்குகளை உரு வாக்கியுள்ளது. 

மேலும், என்.ஐ.டி. தொழில்நுட்ப கல்லூரியின் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீய ரிங் துறையின் பேராசிரியர் நாகமணி மேற்பார்வையில், சி.டி.ஏ.சி.யின் மூத்த இயக்கு நர் சந்திரசேகர் பல்வேறு  ஆய்வுகளை மேற்கொண் டார். இதில் 2 சாதனங்கள் உருவாக்கப்பட்டு, உபயோ கத்துக்கு தயாராக உள்ளன. ஆற்றல் குறைகடத்தி சாத னங்களில் மேம்பட்ட தொழில் நுட்ப வளர்ச்சியைப் பயன் படுத்தி இந்த மின்னூட்டக் கருவி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இந்த உள்நாட்டு ஆராய்ச்சி குறிப்பிடத்தக்க சமூக நன்மைகளை கொண்டுள்ளது. செல்போன் சார்ஜிங், ஒருங்கி ணைக்கப்பட்ட சோலார் பேனல்களுடைய தெரு விளக்குகள், கழிவுநீர் கண்கா ணிப்பு அமைப்புகளுக்கான பயனுள்ள ஆற்றல் சேமிப்பு உள்ளிட்ட அன்றாட தேவை களுக்கு சூரிய ஒளி மின்சா ரத்தை இந்த ஆராய்ச்சி பயன்படுத்துகிறது.

திருச்சி என்.ஐ.டி.யின் இயக்குநர் அகிலா, நிறுவ னத்தின் ஆராய்ச்சி திறன்கள், தொழில்துறையின் தேவைக ளை உணர்ந்து, பங்காற்றுவது குறித்து பாராட்டினார்.