india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பெங்களூரு

பாஜக தொடர்ந்த   அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன்

கடந்த 2023இல் கர்நாடக மாநி லத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த பாஜக ஆட்சியில் நிகழ்ந்த 40% கமிஷன் விவகாரத்தை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டார். இதை யடுத்து அவதூறு பரப்பி யதாக பாஜக மேலவை உறுப்பினர் கேசவ் பிரசாத் புகாரின் பேரில் ராகுல்காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கு தொடர்பாக வெள்ளியன்று பெங்களூரு 42ஆவது ஏசிஎம்எம் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி விசாரணைக்காக நேரில் ஆஜரானார். விசாரணை முடிவில் சித்தராமையா, டி.கே.சிவகுமாருக்கு ஜாமீன் வழங்கி யதை போல ராகுல் காந்திக்கும் ஜாமீன் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

விஜயவாடா

5 நாட்களில் ரூ.579 கோடி வருமானம் ஈட்டிய சந்திரபாபு நாயுடுவின் மனைவி

மக்களவை தேர்தல் முடிவு நாளான ஜூன் 4 அன்று சென்செக்ஸ், நிப்டி  பெரும் வீழ்ச்சி அடைந்தன. அதன் பிறகு சுமார் 18 மணிநேரத்திற்கு பிறகு சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் தொடர்ந்து ஏற்றம் கண்ட நிலையில், ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றிய தெலுங்கு தேசத்தின் தலைவரும், மாநிலத்தின் அடுத்த முதல்வருமான சந்திர பாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஸ்வரி தேர்தல் முடிவு நேரத்திலிருந்து கடந்த 5 நாட்களில் பங்குச் சந்தை மூலம் ரூ.579 கோடி லாபம் ஈட்டி யுள்ளார். 

பங்குச்சந்தையில் நாரா புவனேஸ் வரி ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இந்த பங்கு பட்டியலிடப்பட்டுள்ள எப்.எம்.ஜி.சி குறியீடு தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் நல்ல வளர்ச்சி அடைந்தது. அதா வது ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடித்தவுடன் ஹெரி டேஜ் புட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் உச்சம் கண்டன என்பது குறிப்பிடத் தக்கது.

பெங்களூரு

அறிவிக்கப்படாத ஒன்றிய அமைச்சர் பதவிக்காக மஜதவில் அடிதடி

கர்நாடக மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை எதிர்கொண்ட மதச் சார்பற்ற ஜனதா தளம் மாண்டியா, கோலார் ஆகிய இரண்டே தொகுதிகளில் வென்றது. பாஜக பெரும்பான்மை இழந்துள்ளதால் மத்தி யில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய வுள்ள நிலையில், தெலுங்கு தேச தலை வர் சந்திரபாபு, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் போன்று தங்கள் கட்சிக்கும் ஒன்றிய அமைச்சர் (வேளாண்துறை) பதவி வேண்டும் என பாஜகவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மஜத கட்சிக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வழங்குவது குறித்து பாஜக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், அறிவிக்கப் படாத ஒன்றிய அமைச்சர் பதவிக்காக மஜதவில் அடிதடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அதாவது முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் குமாரசாமியும், மருமகன் டாக்டர் சி.என்.மஞ்சுநாத்தும் அமைச்சர் பதவிக்கு முட்டி மோதிக் கொண்டு உள்ளனர்.
 

;