புதுதில்லி, ஜன. 13 - 2023 டிசம்பரில், இந்தியாவின் சில்லரைப் பணவீக்கம் 5.69 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் சில்லறை விற்பனை விலைப் பணவீக்கம் குறித்த புள்ளி விவரங்களை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளி யிட்டுள்ளது.
அதில், 2012=100 என்ற அடிப்படையில் அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டெண் மற்றும் 2023 டிசம்பர் மாதத்திற்கான கிராமப்புற, நகர்ப்புற மற்றும் ஒருங்கிணைந்த நுகர்வோர் உணவு விலை குறியீடு தொடர்பான புள்ளி விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட 1114 நகர்ப்புற சந்தைகள் மற்றும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 1181 கிராமங்களில் இருந்து விலை விவரங்கள் சேகரிக்கப்பட்ட விலை கள், கிராமப்புறங்களில் 90.0 சதவிகிதம் மற்றும் நகர்ப்புறங்களில் 93.7 சதவிகிதம் என்ற அளவில் பதிவாகியுள்ளது. காய்கறி, பழங்கள், பருப்பு வகைகள் போன்ற பிரிவுகளில் ஏற்பட்ட உயர்வால் இந்தியாவின் சில்லரை பணவீக்கம் முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு டிசம்பர் மாதத்தில் 5.7 சத விகிதமாக உயர்ந்துள்ளது.
மறுபுறத்தில், பலவீனமான உற்பத்தி, நவம்பர் மாதத்தில் தொழில்துறை வளர்ச்சி 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு 2.4 சதவிகிதத்திற்கு இறங்கியது ஆகியவையும் காரணம் என்று கூறப்படுகிறது.