எதிர்க்கட்சிகளை கண்டு பாஜக பயப்படுவதால் அமலாக்கத் துறையை அனுப்புகிறது என ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலை வரும், மாநிலங்களவை எம்பியுமான மனோஜ் ஜா குற்றம்சாட்டியுள்ளார்.
செவ்வாயன்று பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற செய்தியாளர் கள் சந்திப்பில் அவர் கூறுகையில், “வர விருக்கும் மக்களவைத் தேர்தலை யொட்டி எதிர்க்கட்சிகளின் செயல்பாடு களைப் பார்த்து ஒன்றிய அரசு கவலை கொள்கிறது. பாஜகவின் முக்கிய தலைவர்கள் எதிர்க்கட்சிகளைப் பார்த்து பயப்படுகிறார்கள். இந்த பயத்தின் கார ணமாகவே மத்திய புலனாய்வு அமைப்பு களை பாஜக தவறாகப் பயன்படுத்து கிறது. தான் அஞ்சும் கட்சிகளுக்கு எதி ராக அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறையை பயன்படுத்துகிறது” என மனோஜ் ஜா குற்றம்சாட்டியுள்ளார்.
75 வயது லாலுவிடம் 10 மணி நேர விசாரணை
ரயில்வே துறையில் வேலை வழங்க நிலம் லஞ்சமாக பெற்றதாக கூறப்படும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக் கும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலை வர் லாலு பிரசாத்திற்கு அமலாக்கத்துறை தொடர் சம்மனை அனுப்பி வந்தது. திங்க ளன்று பாட்னாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் லாலுபிரசாத், தனது மகள் மிசா பாரதியுடன் விசார ணைக்கு ஆஜரானார். 75 வயது முதிர்ந்த லாலு பிரசாத்திடம் அரசியல் லாபத்திற் காக அமலாக்கத்துறை 10 மணி நேரம் விசாரணை மேற்கொண்டதற்கு “இந் தியா” கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் கடும் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர். இதே வழக்கு தொடர்பாக லாலு பிரசாத் மகனும், முன் னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி செவ்வாயன்று பாட்னாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசா ரணைக்காக ஆஜரானார்.