india

img

தேஜகூ நாடாளுமன்றக் கட்சித் தலைவராக தேர்வு அரசியல் சாசனத்தை வணங்கி நாடகத்தை துவக்கினார் மோடி

புதுதில்லி, ஜூன் 7- பாஜக தலைமையிலான தேசிய  ஜனநாயக கூட்டணியின் கூட்டம் தில்லியில் உள்ள பழைய நாடாளு மன்ற கட்டடத்தின் மைய அரங்கில் ஜுன் 7 வெள்ளியன்று நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்ட ணியின் நாடாளுமன்றக் கட்சித் தலை வராக நரேந்திர மோடி தேர்ந் தெடுக்கப்பட்டார். அக்கூட்டணி கட்சி களின் அனைத்து தலைவர்கள், புதிதாக எம்பிக்களாக தேர்தெடுக்கப் பட்டவர்கள், மாநில முதல்வர்கள், பாஜக தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு வந்ததுமே அரசி யல் சாசன புத்தகத்தைத் தொட்டு எடுத்து, நெற்றியில் வைத்து வணங்  கிய பின்பே இருக்கையில் அமர்ந்தார் பிரதமர் மோடி.

மேடையில் பாஜக ஆட்சிக்கு ஆதரவளித்த 14 கட்சிகளில் 9 கட்சி களின் தலைவர்களுக்கு இடமளிக் கப்பட்டது. மேடையில் அப்னா தளம் தலைவர் அனுப்பிரியா படேல் மட்டுமே ஒரே ஒரு பெண் தலைவ ராக இடம்பெற்றிருந்தார். 

கூட்டம் தொடங்கியதும் அனைத்து தலைவர்களும் ‘மோடி, மோடி’ என முழக்கமிட்டனர். மோடி யை பிரதமர் பதவிக்கு முதலாவ தாக முன்மொழிந்தார் ராஜ்நாத் சிங். சிரித்த முகமாக காட்சியளித்தார் மோடி. சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவருடனும் சிரித்தவாறு பேசிக்கொண்டே இருந்தார்.

சந்திரபாபு நாயுடு தொடங்கி பவன் கல்யாண் வரை அனை வரும் மோடியைப் புகழ்ந்து பேசினர். ஆனால் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் இறுக்க மான முகத்துடனே காணப்பட்டார். அவரின் கட்சி ஓர் இடத்தில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் தலை வர் குமாரசாமி இரண்டு வினாடிகள் மட்டுமே பேசிவிட்டு அமர்ந்தார். 

லோக் ஜனசக்தி தலைவர் சிராக்  பஸ்வான் பேசி முடித்ததும், அவரை கட்டியணைத்து முத்தமிட்டார் மோடி.

நிதிஷ் குமார் தனது பேச்சில் எதிர் கூட்டணியான இந்தியா கூட்டணி யை கிண்டலடித்து பேச, மோடி உட் பட அவையில் இருந்த அனைவரும் சிரிப்பலையில் மூழ்கினர். நிதிஷ் தனது பேச்சில், “இந்த முறை ஒரு  சில இடங்களில் வெற்றி பெற்றவர் கள் அடுத்த தேர்தலில் தோற்றுவிடு வார்கள். அதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் ஒருபோதும் நாட்டுக்காக உழைத்ததில்லை” என்று தனது திடீர் பாஜக விசுவாசத்தைக் காட்டிக் கொண்டார்.

நிதிஷ் குமார் பேசி முடித்ததும் மோடி யின் பாதங்களை தொட்டு வணங்கி தமது தரத்தைத் தாழ்த்திக் கொண்டார். 

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசுகையில், “சிவசேனாவும் பாரதிய ஜனதாவும் ஒரே மாதிரியான சித் தாந்தம் கொண்ட கட்சிகள். இவர்களது கூட்டணி பாலாசாஹேப் (பால் தாக்கரே)  காலத்தில் உருவானது. இது ஃபெவிகால் ஒட்டியது போன்ற வலுவான கூட்டணி. இது உடையாது” என்றார்.

கூட்டத்தில் பேசிய அனைவரும் இந்தி யில் பேச, சந்திரபாபு நாயுடு, குமாரசாமி, பவன் கல்யாண் மூவரும் ஆங்கிலத்தில் பேசினர். 

தமிழகத்தில் இருந்து ஓபிஎஸ், அண் ணாமலை, எல்.முருகன், ஜி.கே.வாசன், டிடிவி தினகரன் முதலானோர் கலந்து கொண்டனர்.

ஓபிஎஸ், ஜி.கே.வாசன், டிடிவி தின கரன், ஜான் பாண்டியன், ரவீந்திரநாத் போன்றோர் முன்வரிசையில் அமர, எல்.முருகன், அண்ணாமலை முதலானோர் பின்வரிசையில் அமர்ந்தனர்.

இக்கூட்டத்தில் மோடி பேசுகையில், “தென்னிந்தியாவில் என்டிஏ புதிய அர சியலை துவக்கியுள்ளது என்பதை இந்தத் தேர்தலில் நான் கண்டேன். கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் இப்போதுதான் புதிய ஆட்சிகள் (காங்கிரஸ்) அமைந் தன. எனினும், இந்தத் தேர்தலில் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தழு வினர். தமிழக பாஜக அணிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கி றேன். அங்கு எம்பிக்கள் யாரும் இல்லை.  ஆனால் தொண்டர்கள் பாஜக கொடியை உயர்த்திப் பிடித்துள்ளனர். இன்று தமிழ கத்தில் எந்த தொகுதியிலும் வெற்றி பெற வில்லை. ஆனால் எங்களது வாக்கு சத வீதம் அதிகரித்துள்ளது” என்று கூறினார். இதேபோல் தனது பேச்சில், பவன் கல்யா ணை சுட்டிக்காட்டிய மோடி, “நீங்கள் பார்ப்பது பவன், அவரின் பெயருக்கு ஏற்றாற்போல் அவர் தென்றல் அல்ல; அவர் ஒரு புயல்” என்று பாராட்டினார்.

சக்திவாய்ந்த தலைவர் சந்திரபாபு நாயுடு என்று மோடி தனது பேச்சில் புகழ்ந்து பேசினார். அதேபோல், என்டிஏ - NDA-க்கு புதிய விளக்கம் கூறிய மோடி, (N-New India, D-Developed India, A-Aspirational India) என்டிஏ என்றால் புதிய இந்தியா, வளர்ந்த இந்தியா, லட்சிய இந்தியா என்று கூறிக் கொண்டார்.

மோடி பேசி முடித்ததும் அவரை வாழ்த்தி அவருடன் புகைப்படம் எடுக்க கூட்டம் முண்டி யடித்த. இப்படியாக பல்வேறு காட்சிகளு டன் துவங்கியுள்ளது மோடியின் அடுத்த நாடகம்.

வேக வேகமாக காட்சிகள் மாறுவதே நாடகம்.

ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை வெள்ளியன்று சந்தித்தார். அப்போது, பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதற்கான கடிதத்தை வழங்கி, ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனை அடுத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,  ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி, நரேந்திர மோடி ஜூன் 9 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 7.15க்கு மூன்றா வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இந்நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்க சுமார் 8000 பேருக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அழைப்பு விடுத்திருக்கிறது. இத்தகவலை பாஜக மூத்த தலைவர் பிரஹலாத் ஜோஷி உறுதிபடுத்தியுள்ளார்.

;