india

img

கருத்துக் கணிப்புகளால் அம்பலமான மோடியின் ஊதுகுழல்கள் கோடி மீடியாவின் ஓட்டைகள்

7 கட்டமாக நடைபெற்ற 18ஆவது  மக்களவை தேர்தல் சனியன்று  நிறைவு பெற்றது. 7ஆவது மற்  றும் கடைசி கட்டத் தேர்தல் நடை பெற்ற நாளான சனியன்று மாலை  “தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு (எக்ஸிட் போல்)” முடிவு கள் வெளியானது. இந்த முடிவுகள் அனைத்தும் பாஜகவிற்கு ஆதர வான கருத்துக்கணிப்புகள் என்று கூறலாம். பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா  தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது  வாய்க்கு வந்ததை அடித்து விட்ட  பேச்சுக்களைக் கொண்டு பாஜக வெல்லும் தொகுதிகளின் எண்ணிக் கையாக கூறி, தேர்தலுக்கு பிந்  தைய கருத்துக்கணிப்பு முடிவு களாக “கோடி மீடியா” ஊட கங்கள் வெளியிட்டுள்ளன. “கோடி  மீடியா” ஊடகங்கள் வெளியிட்  டுள்ள அனைத்து கருத்துக்கணிப்பு களிலும் பாஜக 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றும், “இந் தியா” கூட்டணி 200 இடங்களைக் கூட கடப்பது சிரமம் என கூறப் பட்டுள்ளது.

ஜெராக்ஸ் காப்பிகள்

நியூஸ் எக்ஸ் (NewsX), என்டி டிவி (NDTV), இந்தியா நியூஸ் (India News), ஆக்சிஸ் மை இந் தியா - இந்தியா டுடே (Axis my india - india today), ரிபப்ளிக் (republic), ஜீ நியூஸ் (Zee News)  உள்ளிட்ட ஊடகங்கள் பாஜகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் என்ன சொன்னார்களோ, அதை தேர்த லுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு  முடிவுகளாக வெளியிட்டு, தங்க ளது ஊடக முதுகெலும்பை சுக்கு நூறாக நொறுக்கிக் கொண்டன. இதில் நகைச்சுவையான விஷ யம் என்னவென்றால் நியூஸ் எக்ஸ்  (NewsX), என்டிடிவி (NDTV), இந்  தியா நியூஸ் (India News)  ஆகிய செய்தி நிறுவனம் தங்களுக்குள் ஜெராக்ஸ் பேப்பர்களை பகிர்ந்து  கொண்டது போல, பாஜக கூட்டணி  371, “இந்தியா” கூட்டணி 125, மற்ற வைகள் 47 என்று ஒரே மாதிரி யான கருத்துக்கணிப்பு முடிவு களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்  படுத்தியுள்ளது. 

நிறைய ஓட்டைகள்

மோடி அரசின் 10 ஆண்டுகால  சாதனை போலவே “கோடி மீடியா”  ஊடகங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு களும் உள்ளன. கூறுவதற்கு ஒன்று மில்லாததில் கூட அதிக பிழைகள் என்பது போல பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமான ஜீ நியூஸ் (Zee  News) வெளியிட்டுள்ள கருத்து  கணிப்பு முடிவுகளில் 10 தொகுதி களே உள்ள ஹரியானாவில் பாஜக  16- 19 இடங்கள் வரை வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல வெறும் 4 மக்களவை தொகுதிகளை கொண்ட ள்ள இமாச்சலப்  பிரதேசத்தில் பாஜக  கூட்டணி 6-8 இடங்களில் வெல்லும்  என்று கூறப்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்டு ஏன் பாஜக 350 இடங்  களை வெல்லும் என்று கூறி யுள்ளீர்கள்; 500க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெல்லும் என்று சொல்லியிருக்கலாமே என  சமூக வலைத்தளங்களில் பாஜக -  கோடி மீடியாக்களை நெட்டிசன்கள்  மீம்ஸ் மூலம் பந்தாடி வருகின்ற னர்.

5 தொகுதிகளில் தான் போட்டி... 6 தொகுதிகளில் வெல்லும் வாய்ப்பு!?

பீகார் மாநிலத்தில் பாஜக கூட்ட ணியில் உள்ள லோக் ஜனசக்தி கட்சி 5 தொகுதிகளில் போட்டி யிட்டுள்ளது. ஆனால் “ஆக்சிஸ் மை இந்தியா - இந்தியா டுடே” கருத்துக்கணிப்பு முடிவுகளில் லோக் ஜனசக்தி கட்சி 6 தொகுதி களை கைப்பற்றும் என கருத்துக்  கணிப்பு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன. 

 


 

;