8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடைபெற்ற 5-ஆம் கட்ட மக்களவை தேர்தலில், 60.5% வாக்குகள் பதிவாகி உள்ளன.
2024 மக்களவை தேர்தலில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு, 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் நேற்று நடைபெற்றது. 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு 60.5% வாக்குகள் பதிவாகி உள்ளன.
இதில் மேற்கு வங்கத்தில் 75% வாக்குகளும், ஒடிசாவில் 72.8% வாக்குகளும், லடாக்கில் 70.5% வாக்குகளும், ஜார்கண்ட்டில் 63.1% வாக்குகளும், உத்தரப் பிரதேசத்தில் 57.8% வாக்குகளும், ஜம்மு காஷ்மீரில் 58.2% வாக்குகளும், பீகாரில் 54.9% வாக்குகளும், மகாராஷ்டிராவில் 54.3% வாக்குகளும் பதிவாகி உள்ளன.