கர்நாடகாவில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், குடகு, மைசூர், மண்டியா ஆகிய 3 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.
ஆசிய மகளிர் டி-20 சாம்பியன்ஷிப் போட்டி யில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தி யாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
புதிய திரைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் ஸ்டீபன் ராஜை கேரள சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜம்மு -காஷ்மீரில் பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் சோதனைச் சாவடியில் ஒரு கடைக்காரருக்கும் காவல் துறையினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கடைக்காரர் தனது ஊர் மக்களை திரட்டி 100க்கும் மேற்பட்டோ ருடன் ஷிங்கர் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இந்த சம்பவத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் படுகாயத்துடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தில்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,”தில்லியில் உள்ள கட்டிடத்தின் அடித்தளத்தில் தண்ணீர் தேங்கியதால் மாண வர்கள் உயிரிழந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவ ருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உள்கட்டமைப்பின் இந்த சரிவு அமைப்பின் ஒருங்கிணைந்த தோல்வியாகும். பாதுகாப்பற்ற கட்டுமானம், மோசமான நகரத் திட்டமிடல் மற்றும் நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மை ஆகியவற்றை ஒவ்வொரு நிலையி லும் தங்கள் உயிரை இழப்பதன் மூலம் சாதாரண குடிமக்கள் விலை கொடுத்து வருகின்றனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய பழங்குடி மொழிகளை கற்க உதவும் 25 அடிப்படை நூல்களை பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று தில்லியில் வெளியிட உள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்ற மனு பாக்கருக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஹரியானா முன் னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.