india

img

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பொறுப்பேற்பு!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பொறுப்பேற்றார்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித் நேற்றுடன் (நவம்பர் 8,2022) ஓய்வு பெற்ற நிலையில், 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பொறுப்பேற்றார். புதிய தலைமை நீதிபதிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட், 2024 நவம்பர் 10-ஆம் தேதி வரை நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.