ஜே.இ.இ மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வான ஜேஇஇ மெயின் தோ்வு, ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் ஆண்டுக்கு 4 முறை நடைபெறுகிறது.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மே 24 முதல் மே 28 வரை நடைபெறவிருந்த ஜே.இ.இ மெயின் நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
மேலும், தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.