india

img

ஜாம்நகர் சர்வதேச விமான நிலையமானது சிவில் ஏவியேஷன் இயக்குநருக்கு தெரியாதாம்

புதுதில்லி, மே 31- முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண விழாவின் ஒரு பகுதியாக குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் உள்ள விமானப்படை விமான நிலையம் சர்வதேச அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்பட்டது.

அது குறித்து சிவில் ஏவியேஷன் டைரக்டர் ஜெனரல் (டிஜிசிஏ) அறிந்திருக்கவில்லையாம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி தாக்கல் செய்த மனுவுக்கு அளிக்கப்பட்ட  பதிலில் இது தெரியவந்துள்ளது. எந்த சட்டத்தின் அடிப்படை யில் ஜாம்நகர் விமான நிலையம் பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 வரை பத்து நாட்களுக்கு சர்வதேச விமான நிலைய மாக மாற்றப்பட்டது என்பது கேள்வி. ஆனால் டிஜிசிஏ விடம் இதுகுறித்து எந்த தகவலும் இல்லை என்று பதில் வந்தது.

விமானப்படை தளமாகவும் இருக்கும் ஜாம்நகரில் ஒரு நாளைக்கு ஐந்து சேவைகள் மட்டுமே உள்ளன. திருமணத்தின் போது ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்தி ரங்களின் வருகையால், சேவைகளின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்தது. அம்பானி குடும்பத்தினர் பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம் எழுதி, 24 மணி நேரமும் விமான நிலையத்தை இயக்குமாறு விமானப்படையைகேட்டுக் கொண்டனர். அதன்படி சர்வதேச விமான நிலையமாக அறிவித்திருந்தனர்.

;