india

img

IRCTC இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு வசதி முடங்கியது!

இந்திய ரயில்வே துறையின் IRCTC இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி திடீரென முடங்கியதால், பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
ஒன்றிய ரயில்வே துறையின் IRCTC இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி திடீரென முடங்கியுள்ளது. இதனால் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை IRCTC டிவிட்டரில் வெளியிட்டுள்ளது. அதில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும், அதனை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
ஆனால் அதே சமயம், கார்ப்பரேட் நிறுவனங்களான மேக் மை டிரிப் (Make my trip), அமேசான் (Amazon) போன்ற இணையதளங்களில் பயணிகள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 
 

;