india

தொழிலாளர்களின் வேலையை பறிப்பதில் அமெரிக்காவுடன் போட்டி போடும் இந்தியா

புதுதில்லி, டிச.30- உலகளவில் அதிக தொழிலாளர் களை பணிநீக்கம் செய்த இரண்டா வது நாடாக இந்தியா உள்ளது. 2023  ஆம் ஆண்டு மட்டும் 16,398 தொழிலா ளர்கள், இந்திய ‘ஸ்டார்ட் அப்’ நிறு வனங்களால் பணி நீக்கம் செய்யப்பட்  டுள்ளனர்.இது கடந்த காலங்களை விட 15 சதவீதம் அதிகமாகும்.

2020 முதல் 2023 வரையிலான 5 ஆண்டுகளில் மற்றும் உலகம் முழு வதும் கிட்டத்தட்ட 5.2 லட்சம் தொழி லாளர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்க ளில் இருந்து பணி நீக்கம் செய் யப்பட்டுள்ளனர். இதில் சுமார் 66.6 சத வீத ( 1.7 லட்சம் ) தொழிலாளர்கள் அமெரிக்காவில் மட்டும் பணிநீக்கம் ஆகியுள்ளனர்.அதே வேளையில் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக உள்ள இந்தியாவில் 9.1 சதவீத தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது உலகளவில் 2 ஆவது இடம் ஆகும்.இதற்கு அடுத்ததாக நெதர்லாந்து 3.4 சதவீத தொழிலாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. 

இந்தியாவைப் பொறுத்த வரை கல்வியை கார்ப்பரேட்மய மாக்கியுள்ள பைஜூஸ்,ரிலையன்ஸ் ஜியோ மார்ட் மற்றும் பேடிஎம் ஆகிய  நிறுவனங்கள் முறையே 2,500, தலா  1000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளன. 

இந்தியாவைப் பொறுத்த வரை கல்வியை கார்ப்பரேட்மய மாக்கியுள்ள பைஜூஸ்,ரிலையன்ஸ் ஜியோ மார்ட் மற்றும் பேடிஎம் ஆகிய  நிறுவனங்கள் முறையே 2,500, தலா  1000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளன.