india

img

பால் விலை மற்றும் சாலை வரி உயர்வு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

புதுதில்லி, ஜூன் 3- மக்களவைக்கான ஏழு கட்டத் தேர்தல்கள் முடிந்ததை அடுத்து அரசாங்கம் பால் விலையையும், சாலை வரியையும் உயர்த்தியிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மதர் டைரி மற்றும் அமுல் ஆகிய பால் நிறுவனங்கள் பாலின் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவிக்கிறது. தேர்தல் முடிந்தபிறகு மக்கள் மீது சுமையினை ஏற்றுவதற்காக அரசாங்கம் இதுநாள்வரை காத்துக்கொண்டிருந்தது என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

முன்னதாக, தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிந்தவுடனேயே, நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சாலை டோல் வரிகளும் 5 விழுக்காடு அளவிற்கு உயர்த்தப்பட்டிருக்கின்றன. இது அனைத்துப் பண்டங்களின் விலைகளையும், குறிப்பாக சாலைகள் வழியாக எடுத்துச்செல்லும் அனைத்து உணவுப் பண்டங்களின் விலைகளையும் உயர்த்திடும். அதுமட்டுமல்லாமல் மக்களின் பயணக் கட்டணங்களும் உயர்ந்திடும்.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

;